பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 7 1

அமைந்து கிடப்பக் காணிர்! ஆசிரியரின் முதல் நோக்கம் பொருளின் இன்றியமையாமை காட்டி யாவரையும் இடையறாது ஈட்டத் தூண்டுவது. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் (751) என்பதனால் இல்லபிற நிரப்பும் வன்மையும், எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும் (753) என்பதனால் தூது செல்லும் தன்மையும் , செல்வத்தின் தனியாற்றல்களாம். இவ்வுண்மை யுணர்பவர் பொருளைக் குறைத்துப் பேசார், கல்வி கேள்விகளே அழிவில் செல்வங்கள்: பொருளோ அழிதல் மாலையது. இஃதோர் செல்வமாமோ என்று இவ்வுலகத்துத் தூற்றிப் பேசார். ஒவ்வொன் றும் ஒவ்வொரு நிலையில் வேண்டும் என்றே உரிய இடம் உணர்வர். “அற்கா இயல்பிற்றுச் செல்வம் (333) என வள்ளுவரும் ஒப்பி மொழிப. -

நிலையாமை செல்வத்தியல்பு என்பதனால், பற்றுள்ளங் கொண்டு அதனை நிறுத்தப் பாடுபடுதல் பேதைமை என்பது கருத்தாமே யன்றிப் பொருளிட்டம் குற்றம் என்றோ வேண்டாம் என்றோ கருத்தாகாது. உடல் நிலையாதது என்பதனால், மக்களைப் பெறுதல் இழிவு என்றும் அதனை விளைவிக்கும் இல்லறம் இழிவு என்றும் கொளப்படுமோ? மக்கட் பேறன்றோ யாம் அறியும் பெரும் பேறு; இல்லறம் அன்றோ அறனெனப்பட்டது என கொள்வர். பழம் அழுகிப்போம்; பலகாரம் ஊசிப்போம் என இயல்பு தெரிப்பது பிழையா? அழுகுவதன் முன்னும் ஊசிப்போவதின் முன்னும் தின்று பயன்படுத்த வேண்டும் என்பதே உட்கிடை அற்கா இயல்பிற்றுச் செல்வம்’ என இயல்பு வரைந்த வள்ளுவர், அதே மூச்சில், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் (333) எனப் பயன் வரைப. செல்வம் நிலையாது, ஈட்டற்க; இளமை நிலையாது, வளரற்க: உடல் நிலையாது, வாழற்க: என முதலறுக்கும் கருத்து தமிழ் நூலில் இல்லை. யார் மாட்டும் நில்லாது செல்வம்: ஆதலால், பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க: தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு: ஆதலால், யாம் இளையம் என்னாது கைப்பொருள் உண்டாம் போழ்தே கரவாது அறஞ் செய்ம்மின்; புல் நுனிமேல் நீர்போல் உடல் நிலையாமைத்து: ஆதலால், இன்னினியே செய்க அறவினை என வரூஉம் நாலடிப் பகுதிகளே சான்றாவன. நில்லாத