பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளுவம்

வற்றை நிற்கின்ற சிறுபொழுதைக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறைவதுவே தமிழ் அறநூல்களின் உள்ளம். இவ்வுண்மை உணராதவரே ஈட்டாது, கால் முடங்கி, மனஞ்சுருண்டு. நிலையாமை பேசி, அவ்வுலகச் செலவு பார்த்து, இவ்வுலகத்து நிலக்குப் பொறையாகக் கிடப்பர். அவர் முன் இருந்து சொல்வார் போல் செய்க பொருளை (759) என வள்ளுவர் ஆணையிடுவர். ஒண்பொருள் காழ்ப்ப இயற்றுக (760) என ஊக்குவர். இவ்வாணைக்குப் பின் பன்னாள் மடியனும் வாளா விருப்பனோ? காலாடி, மனம் விரிந்து, பொறுப்பு உணர்ந்து, மெய்யுதறி, மடிபோக்கிக் குகை விடுத்து வரும் புலிபோல், உடல் நிமிர்ந்து உழைக்கப் புறப்படானோ?

வள்ளுவர் ஆணைகேட்டு, உளங்கிளர்ந்து பொருளிட்ட எழுந்தவன், மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது கருமமே கண்ணாகின்றான். பசித்துக் கிடந்தவன் உணவு வேட்கை போலவும், காயலுற்றவன் நீர் வேட்கை போலவும், அறத்திற்குத் தகும் தகாது என நினையாது. ஒரே நோக்குடையவனாய்ப் பொருள் குவிக்க முயலுகிறான். இது போர்க்காலம்; இது மழைவளஞ் சுருங்கிய காலம்; இது எனக்கு வாய்த்த பதவிக்காலம்; நான் பெரும் பொருள் தொகுத்தற்கு இதுவே பொய்யாக் காலம் என ஒருவன் துணிகிறான். துணிந்து மனமாசு படினும், நெறி மாறுபடினும் பொருட்படுத்தாது, செல்வத்தைத் திரட்டுகிறான். கேவலம் ஈட்டும் உணர்ச்சி மிக்கானுக்கு,

அறனினும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள் (754)

என நெறியுணர்ச்சியை, நேர்மைப் பண்பை ஊட்டுவர். பொருள் மிகப் படைத்தார்க்கு, ‘அறனும் இன்பமும் பெறுதற்கு எளிய பொருள்கள் என்று கிளந்த வள்ளுவர் ஈண்டு ஒரு வரையறை காட்டுகிறார். பொருளெல்லாம் அறம் இன்பம் பயவா. தீதின்றி வந்த பொருளே அவற்றைப் பயக்கும் என விதி செய்கிறார். ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணைத்துக் கூறுகிறார். நல்வழியே நலம் விளைக்கும் என நெறிக்கும் பயனுக்கும் நீங்காத தொடர்பு சுட்டுகிறார். இளமாணாக்கர்க்குத்