பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வள்ளுவம்

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் (853)

என்றபடி, வேண்டாக் கருத்தினை இகலி, அக்கருத்துடையாரைப் பகைத்து இகலா எண்ண மாட்சியாலன்றோ, நம் இந்தியத் தாய்நாடு படைப்பெருக்கம் இன்றியேயும், ஆற்றல்சால் நாடாக மதிக்கப்படு கின்றது. இவ்வெல்லாம் வினைத்துாய்மை ஒப்ப நெறித் தூய்மையும் இன்றியமையாதது என்ற நல்லுணர்வை நமக்கு ஊட்டின. அண்ணல் அடிகளாரின் அறிவுரை தெளிந்துடையோம்; ஆதலின், ஈட்டலினும் ஈட்டு நெறிக்கு வள்ளுவச் செம்மல் முதன்மை வழங்கினாரல்லரோ என்ற ஐயவுணர்வு நமக்குப் பிறப்பதாயிற்று. பிறக்க வேண்டுவதொரு கருத்துத்தான்.

நன்று, திருக்குறள் ஆசிரியர், கல்வியாகுக, அறிவாகுக. பொருளாகுக, வினையாகுக நெறியாகுக, யாண்டும் தூய்மையே வேண்டும் ஒரடிப்படைக் கோளினர். தூய்மை நோக்கொடும், தூயசெயல் நோக்கொடுமே அறங் கரைபவர், மனத்துக்கண் மாசிலனாதல் என்னும் தம் முதல் வள்ளுவத்திற்கு ஒப்பவே,

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் (364)

மணந்துாய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்துாய்மை தூவா வரும் (455)

என அடிப்படை மறவாது குறள் யாப்பவர். வினைத்துாய்மை அதிகாரத்தும் பொருள்செயல்வகை அதிகாரத்தும் சொல்லப்படுவது செயல் மாத்திரம் அன்று பொருளிட்டல் மாத்திரம் அன்று: செய்வினையைக் காட்டினும் தேடு பொருளைக் காட்டினும் ஆண்டு நெறித் தூய்மையே கழறப்படுவது. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656), இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் (654). “புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும் (652) எனவாங்கு. தூய்மையொடு படாவாயின், வினைகளை விட்டொழிக என்று வன்முறை செய்யும் அத்துணைத் தூய்மைப் பற்றுடையவர் வள்ளுவர். அழக்கொண்ட வெல்லாம் அழப்போம்: (659), களவினால் ஆகிய ஆக்கம் பெருகுவது போலக் கெடும்