பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளுவம்

என்ற வரையறைகளை முன்வையாது, கற்க கசடறக் கற்பவை: எனச் செயல்நிலையை முன்னுரைத்த நடை நுட்பம் வள்ளுவர் நெஞ்சம் இற்றெனப் புலப்படுத்தும். நெறி இன்றியமையாச் சிறப்பினதாயினும், முதற்கண் வற்புறுத்தற்பாலது செயலேயாகும். செயலின்றி எந்நெறியும் அமையாதுகாண். திருத்தமெல்லாம் செயல்நிலைக் கண்ணது என்பது எச்சிறு வினைக்கும் பொருந்து வது காண். ஆதலால், பொருளல்லது இல்லை பொருள்’, ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செய்க பொருளை, “ஒண் பொருள் காழ்ப்ப இயற்றுக’ என்றவாறு மக்களை ஒருபாற் செயற்படுத்தி, தின்றி வந்த பொருள்தான் அறன் ஈனும் இன்பமும் ஈனும் என்றும், அருளொடும் அன்பொடும் வாராப் பொருளைப் புல்லார் புரளவிடு என்றும் செயல் நிலையில் நெறிப்படுத்துவர்.

பொருள் நிலை என இந்நாள் தலைப்பின்கண் வாணிகம் பற்றிச் சில சொல்லவேண்டும். பெரும் பொருள் ஈட்டுதற்கும் நெறித்து.ாய்மை காட்டுதற்கும் உரிய பேரிடம் வாணிகம் அன்றோ! உழைப்புத் தொழில்கள் செல்வப் பெருக்கை நல்கமாட்டா. ஆசிரியம், மருத்துவம் பிற பதவி முதலாய வினைகள் வரையறுத்த ஊதியமே தருவன. வாணிகம் சாராப் பிற துறையாளர் நடுவு நிலைமை கோடினும், கையூட்டு பையூட்டுப் பெறினும், பெருத்த செல்வராதல் அரிது. வாணிகமே செல்வத்துறையாவது. வாணிகமே நெல் விதைத்து நெல் குவிப்பது போலப் பொருள் முதலிட்டுப் பொருள் திரட்டற்கு அமைந்த நிலைக்களமாவது. ஆதலின், நடுவுநிலைமை யதிகாரத்து வணிக நிலைக்கென ஒரு தனியறம் கூறினார் வள்ளுவர். வாணிகம் செய்வார்க்கு வாணிகம் என்று இனியதோர் எழுச்சி நடையில் தொடங்கி, பேணிப் பிறவும் தமபோல் செயின் (120) என்று அரியதோர் அறநடையில் முடித்தார். ‘கற்க கசடற என்றாங்கு, வணிகச் செயல் உய்த்து நாணய வொழுங்கு கற்பித்தார். இக்குறளில், “பிற” என்றது மற்றையோர்க்கு விற்கும் சரக்குக்களை தம’ என்றது விற்பனைக்கு வணிகன் வாங்கும் சரக்குக்களை. எனவே வணிகன் பண்டங்களைத் தூய்மையாக வாங்குவதுபோலத் தூய்மையொடு விற்கவும்