பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வள்ளுவம்

என ஆசிரியர் கொடை வறுமையின் பரந்த செல்வாக்கைக் காட்டுப. “இச்சரக்கு எங்கும் விலைபோகும் என்ற வழக்குப்படி, இவ்வறுமை யாண்டும் மதிப்புக்கொள்ளும் என்ப. இதனை வறுமை என்ற சொல்லால் கிளக்கவும் அஞ்சி, சீருடைச் செல்வர் சிறுதுணி (1010) எனக் காதல்நடை இலங்க மொழிப. யாரும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது வள்ளுவம்; ஆதலின், உரிமை துறந்த முழுக்கடன் உணர்ச்சியை அறமாக விதித்திற்றிலர். செய்க பொருளை, ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற விதிநடைபோல உரிமை ஒழித்துக் கடமை செய்க என்றோ, துய்த்தல் விடுத்து ஈதல் செய்க என்றோ நடை யாத்திலர். சொல்லியும் கற்றும் வரக்கூடியதன்று முழுத் துறவு என உலகு ஒட்டும் பண்பு தெளிந்தவராதலின், செயற்கரிய செய்வார் பெரியர் (26) என்ற தன்மை நடைபோல, “இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் (218) என உள்ளது சுட்டி அமைந்தார். அன்னோரெல்லாம் கடனறி காட்சியவர் (2.18) எனப் பெருமைக்குரிமை சுட்டி (பின்பற்றுவதற்கு இயலாது என்ற எண்ணத்தால்) விடுத்தார்.

இதுவரை நாம் கடைப்பிடித்தற்கு ஒல்லாது உயர்ந்த அரிய கடமையினரை அறிந்தோம். முற்றும் உரிமை துறந்த இவ்விழுமி யோர் உலகிற் சிலராய் ஒரு பாலாக, முற்றும் கடமை மறந்த மக்கள் பலராய் யாண்டும் காண்கின்றோம். துய்க்கும் உரிமையே இவர் முழுமன நிறைவு. வினை செய்தானே அதன் முழுப் பயனையும் நுகரவேண்டும் என்பதற்கு ஒப்ப, செல்வம் ஈட்டியவனே முழுதும் துய்க்க வேண்டும் என்ற கொள்கையினர். தானுண்டு, தன் வாய் உண்டு, தன் உடல் உண்டு எனத் தன்னையே நினையும் தடிப்பின ராய், பெற்றோர் மனைவி மக்கள் சுற்றம் அற்றவர் போல, அனத்தையும் துய்க்கும் அவாவினர். அருகிருந்து தாய் சோறு படைக்கவும், மனைவி சோறு படைக்கவும் கூட, பொறா மனத்தினர், தாம் ஈட்டிய செல்வத்தைத் தாமே துய்த்தழிக்கும் இன்ன இழிநிலையினோரையும் கண்டவர் வள்ளுவர். இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உனல் (22.9)