பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வள்ளுவம்

வருவதன்று. வெறும் சோற்றுப் பண்டக் குவியலால் அமைவதன்று. உணவுக்காலை உள்ள மனவெழுச்சியே இன்பத்தைப் பெருக்க வல்லது. அதனாலன்றோ, பண்டைத் தமிழ் வள்ளல்கள் பாணரோடும் புலவரோடும் இருந்துண்ண விரும்பினர். மேலை நாட்டவர் போல் குடும்ப முழுதும் ஒக்க இருந்து இன்னுரையாடலோடு உண்பதுவே துய்ப்பு நெறியாகும்.

தனித்து உண்பது அவா உணர்ச்சிக்கும் அச்ச வுணர்ச்சிக்கும் அடிப்படை. ‘அறத்தான் வருவதே இன்பம் (39) என்பது அதிகாரத் துணிபாதலின், அதன் புறத்து வரூஉம் வாழ்வு நுகர்ச்சியெல்லாம் மனநோயும் உடல் நோயும் விளைப்பனவாம் என்க. இவ்வொரு வரையறைக்கு உட்பட்டு உண்ணுக, உடுத்துக, ஆடுக, கூடுக. மக்கள் மெய்திண்டல் உடற்கு இன்பம் (65), ஈத்துவக்கும் இன்பம் (228), ‘இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் (946) என வருவன ஆசான் காட்டும் நல்லின்பங்களாகும். அறத்துப்பட்ட இன்பம் வரையறை யுடையதேயாயினும் நிலையுடையது; வளர்வுடையது; அச்சமற்றது; வாழ்வுப் பயிருக்கு வேலி நிகர்ப்பது. அறத்தொடு படா இன்ப வெள்ளம் பெருகுவது போல் வாழ்வைக் கீழறுப்பது; உடைபட்ட மடைவாய்ப் பயிர்போல் வாழ்வை அழித்தோடுவது ஒரு நாளின்பம் பல்லாண்டுத் துன்பம் தருவது. இவ்வெல்லாம் தெளிந்தன்றோ, ‘அறத்தான் வருவதே இன்பம் என யார்க்கும் இன்பக் குறிக்கோள் ஒன்று நிறுவினர். ஆதலின் வாழ நூல் செய்த வள்ளுவர் வீழ்வு தருஉம் இன்பத் தடை செய்பவரேயொழிய, வாழ்வு அளிக்கும் அறவின்பப் பகைவர் அல்லர்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (1330)

என்ற ஒரு குறளே அப்பெருமகனார் உலகின்ப நலத்துக்குச் சான்று. துய்க்கும் இன்பத்தைக் கட்டுப்படுத்துபவர் அல்லா வள்ளுவர். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லுள்ளம் ஒருவற்குத் தான் பெற்ற இன்ப அடிப்படையினின்று பிறக்க வேண்டும். தன்னலம் அழியாப் பிறநலமே உலகொட்டும் இயற்கை. அருள் என்னும் அன்பு ஈன் குழவி (757) என இவ்வியற்கையை ஆசிரியர் ஒப்புவர். துய்ப்பின்பம் அறிபவனே பிறர்க்கு ஊட்டின்பம்