பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 87

அறிவான். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு (399) என்றபடி, தன்னின்பம் நுகர்ந்தவன் பிறரை நுகர்விக்க வல்லானாவான். ஆதலின், அறனொடுபட்ட இன்பத் துய்ப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்வார் வள்ளுவர் அல்லர்.

கடன் பட்டும் தன்னை விற்றும் வரவுக்கு விஞ்சிச் செலவு செய்வது பேதைமை. பொய்ம்மானம் நச்சிப் பொருள் வலி பாராது. அகலக்கால் வைப்பது புல்லறிவு. வருவாய்க்கு அடக்கமாகச் செலவு கொள்வதே துய்ப்பு நெறி “வரும்படியை நான்கு கூறாக்கி, ஒரு கூறினை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்க வேண்டும்” என்பர் பரிமேலழகர். செலவு அடக்கி, வைப்பு மிகுப்பதே அறிவுடைமை; எதிரதாக் காக்கும் பகுத்தறிவு என்க. இன்றோ மக்கள் நிலையாது? பொருள் வலியாது பண்டத்தின் விலை யாது? வணிகர் மனம்போல் நாள்தொறும் பண்டவிலை தரங்குறைந்து பெருகுகின்றது. பல குடும்பத்தார் செலவு வரவுக்கு உட்படுமாறு இல்லை. வரவும் செலவும் தன்னொத்துக் காண்பதே இக்கால அறிவுப் போராட்டம். இந்நிலையில் எதிர்கால வைப்புக்கு இடமுண்டோ நாட் செலவை ஒத்துப்படுத்திக் கொண்டாற் போதாதா?

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை (478)

என்பது குறள். வருவாய்க் கோடு கடந்து வறுமைக் கோட்டிற்குள் அடிவையாதே’ என்பது இதன் கருத்தாயினும், வரவு முழுதையும் எஞ்சாது துய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படு கிறார் என நாம் அறிகிறோம். ஆதலால், இன்பக் கட்டுப்பாடு செய்தல் வள்ளுவர் நினைவன்று. அறத்தான் வருவதே இன்பம் என்னும் நெறித்துய்மையே வள்ளுவம் எனத் தெளிக. a”

வறியவன் இரந்து வாழத் துணியாது முயன்று வாழத் துணிய வேண்டும். செல்வன், அஃதாவது வறுமை நீங்கியோன், தானே துய்த்து வாழ எண்ணாது கொடுத்து வாழ எண்ண வேண்டும். என் வருவாய் என் செலவிற்கே போதவில்லை என் குடும்பக் காப்பிற்கே பற்றவில்லை; எச்சப்பட்டன்றோ ஈதல் வேண்டும் என ஒருவன் சொல்லுகிறான். தனக்கு மிஞ்சியன்றோ தானம் எனச் சொல்லக்