பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 -- வள்ளுவம்

கேட்கின்றோம். இக்கூற்றை வள்ளுவர் சிறிதும் ஒவ்வார். அவர் வரையறுக்கும் ஈகைக் கட்டுப்பாடு யாருஞ் செய்தற்கு ஒத்தது. யார்க்கும் ஒல்லும் அறம் விதிப்பதே வள்ளுவம்; ஆதலின், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) என அறக்கீழெல்லை சுட்டுவர். வறியார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுத்தல் என்பது இவ்வடியின் கருத்தன்று. ஒன்று என்ற கிளவியான், ஆசான் சுட்டுவது பசிதீர்க்கும் உணவு. அப்பசியை மாற்றுவார் (225) என்றும், அற்றார் அழிபசி தீர்த்தல் (226) என்றும் ஒன்றன பொருளை விளங்கக் கூறுவர். இரப்பார்க்கு ஒன்று ஈவர் (1035) என்ற உழவதிகாரத்துக் குறட் கண்ணும் இவ்வுணவுப் பொருள் அமைந்திருத்தலை நினைவு கூர்க.

ஒருவன் படுஉம் எனைத்து வறுமையையும் தீர்ப்பது நம் கடனன்று; நம்மால் இயலுவது மன்று. வறுமை என்னும் உலக வழக்கு வயிற்று நல்குரவையே குறிக்குமாதலானும், பசிப்பிணி உயிர்க்கெல்லாம் பொது வாதலானும் உண்டிக் கொடை நம் கடன் ஆகும். மன்பதைக்கண் பசித்துக் கிடப்பார்க் கெல்லாம் சோறு படைத்தல், பசிப்பிணி மருத்துவன் என எதிரில் புகழ் சான்ற பண்ணன் போல்வார்க்கே இயல்வதொன்றாயினும், ஒரிரு உயிர்களின் பசிப்பிணி நீக்குதல் யார்க்கும் ஒல்வதுகாண். இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்து உண்மின் என்ற சிற்றறம் செய்ய வல்லாதார் யாரும் இலர். . இரந்துண்ணிகள் கூட, முகம் நோக்கி நிற்கும் நாய்க்குச் சில பருக்கை இடுவது அம்பலக் காட்சி. ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வயிற்றிகை. இச்சிறு முதற்கடமையும் செய்யும் வலியில்லை என்பர்ேல்,

சாதலின் இன்னாதது இல்லை. இனிதது உம் ஈதல் இயையாக் கடை (230)

என இனிய வழி காட்டுவர். மனமின்மையே ஈயாமைக்குக் காரணம்

என்ற கருத்தால், கடமை செத்த நெஞ்சத்தவன் உடல் இருப்பது உலகிற்குப் பயனின்று என்ற எண்ணத்தால், சாதல் இனிது என

இடித்துரைப்பர்.