பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 89

தன் வாழ்க்கைக்கு என மனைவி மக்களைக் கொண்டவன் பின்னை அன்னவர்க்கென வாழுமாப் போலவும், தன்னை ஈன்று வளர்த்த அம்மையப்பரை முதுமைக் காலத்துத் தான் வளர்க்குமாப் போலவும், உலகத்தாற் புரக்கப்பட்ட தான் உலகத்தைப் புரக்கும் கடன் ஆற்ற வேண்டும். பெற்றோர் செய்த நன்மை போல, ஒருவன் வாழ்க்கைக்கு ஊரும் சுற்றுப்புறமும் உலகமும் செய்த நன்மை வெளிப்படக் காணுதற்கு இன்று எனினும், பிறந்தது முதல் நினைந்து பார்ப்பார்க்கு அந் நன்மைப் பெருக்கம் புலனாகும். செய்யாமற் செய்தவுதவி (101) என்பது இவ்வுலக உதவியையே சுட்டும் போலும். ஆதலின் உண்டு வாழ்வான் ஞாலத்திற்குச் செய்யும் ஒழியாக் கடன் ஒன்று உண்டு.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (322) இக்குறள் நடையை நோக்குமின் பகுத்துாட்டிப் பல்லுயிர் ஒம்புதல் என்றார் அல்லர்; என்பரேல் உலகிற்கு ஒட்டா அறங்கரைந்தவர் ஆவர். தம் நூலடிப் படை இறந்தவர் ஆவர். துய்க்கும் உரிமை மறுத்தவர் ஆவர். ஆதலின், பகுத்துாட்டி எனப் பிறவினைப் படுத்தாது, பகுத்துண்டு என ஒம்புவானையும் கூட்டி உளப்பாட்டு வினைப்பட மொழிந்தார். ஈதற் கடமையையும் துய்க்கும் உரிமையையும் தலையறமாகவே எண்ணினார். பகுத்து ஊட்டி மட்டும் அமைவது ஊட்டியான் வாழ்வை அழிக்கும். பகுக்காது உண்டு மட்டும் அமைவது உலக நலத்தை அழிக்கும்; அதனால் உண்டவன் வாழ்வும் அழியும். ஆதலின், உலகமும் வாழ ஒருத்தனும் வாழ, கடமையும் வாழ உரிமையும் வாழ, அறங்கூறும் தமிழ் இனிய ஒரு தொடர், ‘பாத்துாண் என்பது. பழியஞ்சிப் பாத்துாண்” உடைத்தாயின் (44), பாத்துாண் மரீஇயவனை (227), தமது பாத்து உண்டற்றால் (1107) எனத் திருக்குறள் யாண்டும் மறவாது இத்தொடரை ஆட்சி செய்யும். உலகத்தொடு தன்னையும் வாழ்விக்கும் பாத்தூண் வள்ளுவம் என அறிக. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனக் கடமைகளை எண்ணுங்காலை தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43) என உரிமையையும் ஒருநிகர் பொருளாக எண்ணி முடிப்பரேல் ஒன்று