பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஈத்துவக்கும் இன்பம் வறியார்க்குஒன்று ஈவதே ஈகை, மற்றுஎல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (221). அற்புதமான குறள், ஈகையை இன்னதென எடுத்துக்காட்டும் இணையற்ற வாக்கு பிறருடைய வறுமைத் துன்பத்தைக் கண்டு வாளா இராமல் தம்மால் இயன்ற உதவியைச் செய்து அத்துன்பத்தைத் தீர்க்க முயல்வதே கடமை. அதுவே ஈகை எனப்படும். ஈகை என்ற பெயரால் பொருளுடையார்க்கே மேன்மேலும் தந்து உதவுவதால் பயன் இல்லை. அஃது ஈகையும் ஆகாது. வறியவர்க்குத் தம்மால் இயன்ற ஒன்றை ஈவதே ஈகை ஆகும். வறுமை அற்ற பிறருக்குப் பொருள் கொடுத்தல் ஈகை அன்று அது பயன் நோக்கிக் கொடுத்து வாங்கிக் கொள்ளும் முறை ஆகும். ஒருவர் வழங்கும் பொருளைப் பெற்று அதனால் வயிறு வளர்த்து வாழும் வாழ்க்கை நல்ல வாழ்க்கை அன்று. அவ்வாறு வாழ்வதற்குக் காரணமான வறுமை ஒழிய வேண்டும். இதனை வள்ளுவர் பெருமான் நல்குரவு அதி.105 என்பதில் விளங்க உரைத்துள்ளார். வறுமை எய்தினும் பிறர் உதவியைப் பெறாமல் வாழ்வதே சிறந்தது என்பதை இரவச்சம் அதி.107 என்பதில் விளக்கியுள்ளார் அப்பெருமான். வறுமையற்ற ல்லுலகம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று விரும்புவது றிக்கோள் நோக்கம். ஆயின் அதுவரை வறியவர்கள் வாழ் 从。开Q杰·珂