பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் என்று. இந்த அருள்வாக்கை மனத்தில் அசை போட்டு அதுபவிக்க வேண்டும். ஒருவர் தம்மிடம் உள்ளவற்றைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்தால் உண்ணப்படும் வறியவனைப் பசி என்னும் கொடிய நோய் அனுக முடியாது. இங்ங்னம் உதவாமல் தம்மிடம் உள்ள செல்வத்தைப் பெருக்குவதற்காகச் சிக்கனமாக வாழ்க்கையைத் தாம் மட்டிலும் தனிமையாக உண்டு உடுத்து வாழ்வது வாழ்வாங்கு வாழி வேண்டிய வாழ்க்கை அன்று மற்றவரிடம் சென்று இரந்து வயிறு வளர்க்கும் வாழ்வை వL இது மிகக் கொடியது விரும்பத் தகாதது. இரப்பவர்கள் வறுமையில் வாடி இரக்கின்றனர். பொருள் பெற்றவுடன் மகிழ்கின்றனர். கொடுப்பவர்களோ செல்வம் இருந்தும் வாடுகின்றனர். இவர்கட்கு மகிழ்ச்சி என்பது ஒருநாளும் இல்லை; அடைய வழியும் இல்லை. ஆகையால் இரக்கும், வாழ்வைவிட இவர்களது வாழ்வு துன்பமயமானது. இக்கருத்து களை மருந்து மாத்திரைகள் போல, பாத்துண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது (227) " என்றும், இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் (229)" என்றும் செவ்விதின் உரைத்தருளுவார் வழிகாட்டும் வள்ளுவப் பெருந்தகை, ஈவதில் ஒரு தனி இன்பம் உண்டு. இந்த இன்பம் சிறு குழந்தைகட்குத் தெரியும். அதனால் சில சமயம் அவர்க झङ्खझन्7.மேலது 9