பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix அளப்பரிய சிறப்புகளுடன் ஈடு இணையற்ற இலக்கியமாக உலவும், உலகப் பொது மறையாகிய திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப் பட்டாலும், வியக்கத்தக்க சீரிளமைத் திறன் குன்றாமல் எப்பாவலரும் விரும்பும் குவலயம் போற்றும் முப்பால் ஒப்பற்ற ஒல்காப் புகழ் எய்திய காவியமாக இலங்கும் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள்; எளிய உரை, தெளி வுரை, கருத்துரை முதலியன ஏராளமாக வெளியிடப் படுகின்றன. உரைகளை இயற்றல் மற்றும் அவைகளை வெளியிடல் தொடருகின்றன. பொதுவாக, பெரும்பான்மை யான உரைகளில் புதுமை இல்லை. பரிமேலழகர் இயற்றிய பழம் உரையையே எதிரொளிக்கின்றன. திருக்குறளுக்கு உரை மூலம் பொருள் மட்டும் புகன்று செய்யுளை எளிமையாக தெளிவாக சுருக்கமாக விளக்கும் பணி இந்நாள் தேவையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்று மா? வாழ்வியல் அடிப்படையில், உலகியலுக்கு ஏற்ப திருக்குறள் கருத்துக் களை எளிமையாக, தெளிவாக விளக்கியும், வாழ்வியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு, மனித வாழ்வை மாமறைக் கிணங்க மாற்றிட வலியுறுத்தி உரைப்பதே நற்பயனை நல்கும் என்பதே பேராசிரியரின் விழைவாகும். குறளர் திருமால் திருவடியால் உலகையே முழுமையாக அளந்தார் என பழங்கதை பகருகிறது. ஒன்றே முக்கால் அடியில் உலகியல் வாழ்வை அறிந்து, அறிவுரைகளை உவமை நயத்துடன் உள்ளத்தில் உறுதியாக ஊன்றுமாறு உரைத்து உலகப் பொது மறையை உருவாக்கிய இரு வள்ளுவர் மன்பதையை நெறிப்படுத்துகிறார். புராணங்கள், இதிகாசங்கள் பழம்பெரும்