பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 82 காலதத்துவத்தின் கூறுகளைப் பராசர பகவான் விஷ்ணு புராணத்தில் பேசுவர். ஆதியும் அந்தமும் இல்லாத இக்கால நியமத்திற்கு உட்பட்டே இக்கர்மலோகத்திலுள்ள மாறுபாடுகள் எல்லாம் எம்பெருமான் சங்கற்பத்தினால் நடைபெறுகின்றன. காலம் நித்திய விபூதியில் பரமபதத்தில் நித்தியம். இந்த லீலா விபூதியில் இவ்வுலகில் அநித்தியம்: அதாவது பரமபதத்தில் காலம் நடையாடாது. இறப்பு எதிர்வு நிகழ்வு என்ற நிலைகள் அங்கு இல்லை. ஆனால் முன்பின் என்ற அளவிற்கு வேறு பாடு உண்டு. ஆயினும் அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் இறைவனது சங்கற்பத்தினால் மட்டும் நடைபெறுகின்றன வாகும். இந்த உலகில் இஃது அநித்தியமாதலால் இறப்பு எதிர்வு நிகழ்வு என்ற பேச்சு உண்டு. இந்தக்கால தத்துவம் இறைவனது படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய் இருப்பது. இதன் விளக்கம் ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்பெறும். காணாமல் மாயமாய் மறைந்த வைதிகன் பிள்ளைகளைக் கண்ணன் மீட்டுக் கொடுத்த குறிப்பினால் ஒருவாறு தெளிவாகும். தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுக தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிஎன் அப்பl (பெரியாழ்.திரு. 1:6:7) என்னும், பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத் தொருப்படுத்த வுறைப்பன் மேலது 4.8.2 என்றும் பெரியாழ்வார் பாசுரங்களிலும்,