பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அறிவியல் நோக்கு இடரின்றி யேயொரு நாளொரு போழ்தில்எல் லாவுல கும்கழிய படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவன் (திருவாய் 3.10.5) என்ற நம்மாழ்வாரின் அருளிச் செயலிலும் இக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாறு இது: ஓர் அந்தணனுக்கு நான்கு குமாரர்கள். முதல் பிள்ளை பிறந்து பூமியைத் தொட்டதும் காணப் பெறவில்லை. மாயமாய் மறைந்தது. இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளின் நிலைகளும் அங்ங்னமே பெற்றவளும் கூட முகத்தில் விழிக்கப் பெறாதபடி இன்னவிடத்திற்குப்போயின என்று தெரியாமல் காண வொண்ணாதவாறு மூன்று பிள்ளை களும் போயின வாகையாலே நான்காவது பிள்ளையைக் கருவுயிர்க்கும் காலத்தில் அந்த அந்தணன் கண்ணபிரான் அருகில் வந்து "இந்தப் பிள்ளையையாயினும் பாதுகாத்துத் தந்தருள வேண்டும்" என்று வேண்டினான். அப்படியே செய்வதாகக் கண்ணபிரானும் முறுவலித்து வாக்குத் தந்து கருவுயிர்க்கும் காலத்தில் வந்து தெரிவிக்குமாறு கூறினன். கருவுயிர்க்கும் காலமும் வந்தது. அந்தணன் வந்து கண்ணனை வேண்ட அவன் அன்று ஒரு வேள்வியில் தீட்சிதனாக இருக்க வேண்டியதால் கருவுயிர்க்கும் இடத்திற்கு வர முடியாத நிலையில் இருந்தான். அருகிலிருந்த பார்த்தன்,