பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 84 "இது சாதாரண விஷயம் நான் சென்று காப்பாற்றுவேன்" என்று உறுதி தந்து அந்தணனையும் கூட்டிக் கொண்டு கருவுயிர்க்கும் இடத்திற்கு வந்தான். வந்தவன் கருவுயிர்க்கும் இல்லத்தைச் கற்றிக் காற்று கூட நுழைய வொண்ணாதவாறு சரக்கூடு அமைத்துக் காத்திருந்தான். அன்று பிறந்த பிள்ளையும் வழக்கப்படி மாயமாய் மறைய அந்தணன் சினங்கொண்டான். பார்த்தனை இடைமறித்து, 'அதமனே, உன்னாலேயன்றோ என் பிள்னை போம்படி ஆயிற்று. கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றே தடுத்தாய்? என்று நிந்தித்து அவனைக் கண்ண பிரானருகே இழுத்துக் கொண்டு வந்தான். கண்ணன் அது கண்டு முறுவலித்து, அவனை விடு; உனக்குப் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகின்றேன் என்று அருளிச் செய்து அந்தணனையும் தன்னுடன் கொண்டு தேரில் ஏறிப் பிரார்த்தனைத் தேர் செலுத்தச் சொல்லி, அத்தேருக்கும் இவர்களுக்கும் திவ்விய ஆற்றலைத் தன் சங்கற்பத்தால் கற்பித்து அகில உலகங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்க வில்லை. இறுதியாக வைகுண்டத்திற்கு அவர்கள் வருகின் றனர். விரஜை நதிக்கு இக்கரையிலேயே தேரை நிறுத்திப் பார்த்தனையும் பார்ப்பனனையும் இறக்கி அங்கேயே இருக்கச் செய்து தான் மட்டிலும் தன் நிலமான பரமபதத்தில் புகுந்து பார்க்க அங்கு மூன்று நாச்சிமார்களும், (பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார். நீளாதேவி நான்கு குழந்தைகளும் பிறந்த நிலையிலேயே இருக்கக் கண்டு மகிழ்ந்தான். தேவிமார்கள் மூவரும் சொன்னது: "தாங்கள் அவதாரப்பணிகள் முடிந்து சோதிக்கு எழுந்தருளும்போது பூவுலகிலிருந்த திருமேனியைத் துறந்து இங்குள்ள திவ்விய