பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மழித்தலும் நீட்டலும் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (380) "கூடாவொழுக்கம் (28) என்ற அதிகாரத்தில் வரும் இக்குறளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். துறவிகள் இரண்டுவிதமான கோலங்களை மேற் கொள்ளுகின்றனர். அவை தலையை மழுங்ககச் சிறைத்து, மொட்டையாக்கிக் கொள்ளல், தாடி வளர்த்து தலையில் முடியைச் சடையாக்கிக் கொள்ளல் என்பவை யாகும். முன்னதை தருமையாதீன வழி என்றும், பின்னதை திருவா வடுதுறை ஆதீனவழி என்றும் சிலர் வேடிக்கையாகப் பேசுவதைக் கேட்டதுண்டு. இரண்டு கோலங்களையும் வேடங்கள் என்கின்றார் பரிமேலழகர் தவநெறிக்குப் பொருந் தாதவை என்று கடிந்து அவற்றை நீக்கிவிடின் இந்த இரண்டு வித கோலங்களும் தேவையற்றவை என்று கூறுவர் வள்ளுவப் பெருந்தகை. உலகியலை ஒட்டி வாழ்கின்ற வர்களும் தாடியில் பல்வேறு வகைக் கோலங்களை மேற்கொள்ளுகின்றனர். மீசையில் பலவகை இருப்பன போலவே தாடியிலும் பலவகையைக் காண்கின்றோம். நவநாகரிகவகைகளில் இவையெல்லாம் அவரவர் விரும்பும் கோலங்கள் போலும். துறவிகட்குக் கூடாதவை இன்னவை என்று பட்டியலிட்டுக் காட்டிய பிறகு அனைத்திற்கும் மகுடம் போல் இக்குறள் அமைகின்றது.