பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மழித்தலும் நீட்டலும் சடையாக்கிக் கொள்ளல். இதுபற்றிய ஒரு சிறு விளக்கம் - நேரில் கண்டது. விளக்கிக் காட்டப் பெற்றது. 195060 காலத்தில் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் பணி. என் காரைக்குடி வாழ்வில் கம்பனடிப்பொடி சா. கணேசன் முதுபெரும் புலவர் ராய.சொக்க லிங்கம் ராய. சொ) சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா சொ.முரு. தவத்திரு குன்றக்குடி அடிகள் முன்னவர் இவர் களின் கூட்டுறவால் என் சிந்தனை, புலமை, உலகியலறிவு, சமய ஆர்வம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படக் காரணமாயிற்று. ஒரு சமயம் குன்றக்குடி சென்றிருந்தபொழுது மடத்தில் தூத்துக்குடியிலிருந்து வந்த வக்கீல் ஒருவரையும், போர்த்துறையில் ஓய்வு பெற்று வந்த ஒருவரையும் குட்டித் தம்பிரான்கள் நிலையில் சந்திக்கும் வாய்ப்பு நேரிட்டது. முன்னவர் சற்று மந்தமதியினர் என்றும், பின்னவர் கூர்த்தமதி யினர் என்றும் அவர்களுடன் பழகியதால் தெரிந்து கொள்ள முடிந்தது. இருவரும் அப்போது கிராப்புத் தலையர்களாக இருந்தனர். இரண்டு மாதம் கழிந்து மீண்டும் குன்றக்குடி மடத்திற்குப் போக நேர்ந்தது. இருவர் தலைகளிலும் சடைகள் காணப்பெற்றன. வியப்பினால் தூண்டப் பெற்று இ ஃதெப்படி நேர்ந்தது? என்று வினவினேன். போர்த்துதைக் குட்டித் தம்பிரான் இது தெரியாதா? என்று கூறிய வண்ணம் என்னை இட்டுக் கொண்டு ஒரு தனியறைக்குச் சென்றார். அங்கே சிறு சிறு துண்டு உரோமங்கள், பசை முதலியவற்றைக் காட்டி அவற்றைக் கொண்டு சடைமுடி வளர்க்கும் முறையையும் செயல் முறையில் விளக்கிக் காட்டினார். 1. துறையூர் வாழ்க்கையில் (1941-50) தந்தை பெரியாருடன் நெருங்கிய கூட்டுறவு ஏற்பட்டதுபோல வ. வா. சி - 8