பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஊழ் வள்ளுவர் பெருமான் வான்மறையில் ஊழ் என்பது ஒரு தனி இயல் ஒரே அதிகாரம் ஒரே இயலாய் உள்ளது. காரணம் இம்மறையில் உள்ள எல்லாப் பகுதிகளின் எல்லா அதிகாரங்களுக்கும் உரியவர்களை, அது. இறைவன் சார்பில் இயக்கிவரும் தனி நிலைமைக்குரியது. கடவுள் எப்படித் தனியனோ அப்படியே ஊழும் ஒரு தனி நிலை உடையது. இறைவன் மறை பொருளாய் இருந்து எல்லாவற்றிற்கும் காரணமாய் விளங்குவதுபோல ஊழும் மறைபொருளாய் நின்று உலகோர் இயக்கங்கள் எல்லாவற் றிற்கும் காரணமாய் விளங்குகின்றது. இறைவன் முறைமை தவறாதவன். அறவோன் ஊழும் முறைமை தவறாதது அத்திறன் படைத்தது. அவனன்றி ஓரணுவும் அசையாது என்றொரு முதுமொழி உண்டு. ஊழ் அன்றியும் ஓரணுவும் அசைவதில்லை. நாலடியாரில் இதன் இயல்பு. சிறுகா பொருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாக ஆமிடத்தே ஆகும் (110) எனவும் உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆக (104) எனவும்,