பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 94 அனைவரும் செல்வம் பெறவில்லை. பாடுபட்டவர்களில் ஒருசிலரே செல்வம் பெற்றுள்ளனர். பாடுபடாமல் செல்வத்தைப் பற்றிக் கனவு காணாமலிருந்த சிலரும் பெற்றுள்ளனர். பெற்ற செல்வத்தை நுகர்வதிலும் இவ்வாறே கருதியவாறு பொருள் களை நுகர வேண்டும் என்று விரும்பிய எல்லோரும் நுகர்வு பெறவில்லை. அவர்களுள் சிலரே பெற்றுள்ளனர். பொருள் நுகர்வு பற்றி எண்ணாமல் வாழ்ந்தவர்கள் எதிர்பாராமல் பெற்று நுகரவும் முடிந்துள்ளது. ஆனால் அறிவு ஒழுக்கம் முதலிய துறைகளில் உண்மையாக முயன்றும் பெறாததும் இல்லை; முயலாதவர் பெற்றதும் இல்லை. இவ்வாறு ஆராய்ந்தால், புற வாழ்க்கைத் துறைகளில் ஊழின் அமைப்புக்கு ஏற்றவாறே எல்லாம் நடத்தலையும், அகவாழ்க்கைத் துறைகளில் ஊழ் மக்களுக்கு உரிமை கொடுத்திருத்தலையும் காணலாம். இவ்வாறு புறவாழ்க்கையில் உரிமை கொடுக்காமலும் அகவாழ்க்கையில் உரிமை கொடுத்தும் ஆளும் ஊழின் ஆட்சி முறை மிகப் பொருத்தமானதே ஆகும். ஒருவர் அறிவையோ, ஒழுக்கத்தையோ, மற்ற நற்பண்புகளையோ வளர்த்துக் கொள்வதால் மற்றவர்களுக்குத் தீமை இல்லை. பகலவன் ஒளியை ஒருவன் எவ்வளவு பயன்படுத்திக்கொண்டாலும் அதனால் மற்றவர்களுக்குக் குறை இல்லை; இடர் இல்லை. அது போன்றதே அக வாழ்க்கைத் துறை. ஆகையால் அங்கு முயற்சிக்கு ஏற்றவாறு சிறப்புத் தேடிக் கொள்ள உரிமை இருப்பது பொருந்தும், ஆனால் ஒருவர் செல்வத்தைத் தேடுவதிலோ நுகர்வதிலோ அளவு கடந்து சென்றால் அதனால் மற்றவர்களுக்குக் குறைவு ஏற்படச் செய்கின்றார். ஒரு தோப்பில் உள்ள பழங்களை ஒருவர் மட்டும் மிகுதியாகப் பெறமுயன்றாலும் மற்றவர்களின் பங்கு குறைவதால்