பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 98 பெருமான் இங்குக் கூறுவது இந்தக் கருத்தேயாகும் அறிவு ஒழுக்கம் முதலியவையும் ஊழின்படியே அமையும் எனின் அவர் அறிவு ஒழுக்கம் முதலியவற்றைப் பெற்று வாழ்தல் கடமை என்று அறிவுறுத்தியிருக்க மாட்டார். ஆகையால் போன் பொருள் பதவி முதலாகிய செல்வமும் அவற்றை துகாதல் முதலியவையுமே இங்குக் கூறப்பெறுவன ஆகும். இததுடன் இவை நிற்க, புலன்களால் இன்பம் நுகர்வதற்கு உரிய பொருள் களைத் தேடிய அளவிலேயே இன்பம் நுகர முடியும் என்று எண்ணலாகாது. ஊழின் அமைப்புக்கு ஏற்றபடியே நுகர முடியும். நுகர்வுப் பொருள்களைக் கோடிக் கணக்காகத் தொகுத்து வைத்தவர்களுக்கும் ஊழ் வகுத்தபடியல்லாமல் நுகர முடியாது. உணவுப் பொருள்களையும் உடை முதலிய பிற போருள்களையும் நிறையச் சேர்த்து வைத்துச் செல்வராக விளங்கியும், பசியின்மைமுதலிய காரணங் களால் சிலர் நுகர முடிவதில்லை. அவ்வாறு நுகர்தல் இல்லாதவர்கள் அந்தப் பொருள்களால் ஒரு பயனும் பெறாதவர்கள் ஆகின்றார்கள். வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377) என்பது வள்ளுவம் இதில் வகுத்தான் என்பது ஊழை மட்டுமே குறிப்பதன்று ஊழின் மூலமாய் இயங்கும் இறைவனையே குறிககின்றது. இறைவனையன்றி ஊழ், தன்னளவில் செயற்படக்கூடிய அறிவுடைய பொருளன்று. இவண் குறிப்பிட்ட பொருள்களை அவர்கள் துறந்து விடலாம். ஆனால் 3.கஞ்சத் தனமும் ஒரு காரணம். சருக்கரை கூடாது. உப்பு கூடாது, எண்ணெய்ப் பொருள் கூடாது என்ற நிலைகள் கொடுமையினும் கொடுமை.