பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 98 யன்றி அதனால் விளையும் நன்மை தீமைகளை மாற்றிவிட உரிமை இல்லை. ஆகையால் விதைத்தது விளையும் என்று உணர வேண்டும். விளையும்போது தாம் விதைத்தது இன்னது என்று உணர்ந்து திருந்த வேண்டும். அறத்தின் சிறப்பையும் ழிைன் வலியையும் உணர்ந்து தெளிய வேண்டும். இங்ங்னம் உணராமல் நன்மை விளையும் போது நல்லவை என்று உணர்கின்றவர்கள், தீமை விளையும்போது அல்லது படுவது ஏன்? நன்னெறியால் நன்மையும், தீநெறியால் தீமையும் விளையுமாறு செய்யும் ஊழின் வலியை உணர்வதே கடமையாகும். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்? (379) என்ற வள்ளுவம் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. ஊழைவிட வலிமை மிகுந்தவை எவை உள்ளன? அதனைக் கடந்து கொள்ள வேறொரு வழியைத் தேடினாலும் அப்போதும் அதுவே முன்வந்து ஆட்சி புரியும். ஆகவே அதன் ஆட்சி வலிமையை உணர்ந்து அந்நெறியைப் போற்றி வாழ்வதே கடமையாகும். ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தன்முந் துறும் (380) என்பது வள்ளுவம். இக்கருத்தைத் தொடர்ந்து பிறிதோரி டத்தில் ஆள்வினையுடைமை அதி. 62 வள்ளுவர் பெருமான் இதற்கு முறிவு தருகின்றார். ஊழ்வினையும் ஆள்வினையும்; ஊழ்வினையில் தெய்வத்தின் செயல் மிகுதி, உயிர்களின் செயல் திறமும்