பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது பதிகத்தில் முதல் குறளின் விரிவான விளக்கம் அறிவியியல் அணுகுமுறையிலும் ஆன்மிகப் பார்வையிலும் அமைகிறது. 'வான்சிறப்பு 'நீத்தார் பெருமை 'அறன் வலியுறுத் தல் மற்றும் வாழ்க்கைத் துணைநலம் ஆகிய நான்கு பதிகங்களும் திருக்குறள் நூலின் மற்றும் 2,3,4 ஆகிய நான்கு பதிகங்களின் தலைப்புகளும் ஒத்தவை. உணவும் மருந்தும், மற்றும் நோயற்ற வாழ்வு ஆகிய முறையே 24 மற்றும் 27 ஆவது பதிகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் பொதுவாக வேறுபாடு இல்லை. 95 ஆவது பதிகமாகிய மருந்து என்னும் தலைப்பே கருப்பொருளாக அறியப்படு கிறது. மழைநீர் அறுவடைக்காக வலியுறுத்தப்பட்ட அறிவுரைகள், அறிவிப்புகள், அறிவிக்கைகள், விளம்பரங் கள் மற்றும் செயல்விளக்ககங்கள் வெளியிடப்பட்ட காலத்திலும் இன்றும் மழைநீர் சேகரிப்புக்கு, வான் பொய்த்தமையால் வாய்ப்பு இல்லை. யாண்டும் வரட்சியே காட்சி. தண்iைர், தண்ணீர் என மக்கள் அலைகின்றனர். அல்லல் படுகின்றனர். உலக நடைமுறையில் ஆக்கமும், அழித்தலும் ஆகிய இருவேறு பணிகளை இருவர் நிறைவேற்றுவர். மழைப்பொழிவால் நாடு செழுமையாக வளமாகக் காணப்படும். மழைத்துளி வீழ்ச்சி இன்றி பசுமை மறையும். தேவையான அளவு மழை பொழியுமாயின் நிலம் வளம் பெறும். மாறாக அளவுக்கு மீறி, இடைவிடாது, தொடர்ந்து, நெடிது, மழை பொழியுமாயின் வெள்ளம் வீதிதோறும் தெருவெல்லாம் பெருகிப் பாயும், வீட்டினுள் புகும். கழனிகள் நீரில் மூழ்கும். பயிர்கள் பாழாகும். ஊரே