பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. எண்ணும் எழுத்தும் 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பது ஒளவைப் பாட்டியின் அருள்வாக்கு இது. எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணன்ப வாழும் உயிர்க்கு. (392) என்பது கல்வி அதிகாரத்தில் 40 வரும் குறளினின்றும் பிறந்தது. ஈண்டு உயிர்க்கு எண், எழுத்து ஆகிய இரண்டும் வற்புறுத்தப் பெறுகின்றது. இவை இரண்டிலும் எண் முதலில் குறிப்பிடப் பெற்றிருப்பதால் அதன அருமை மேலும் வற்புறுத்தப் பெறுகின்றது. அன்றாட வாழ்வில்: அன்றாட வாழ்வில் எண்தான் முதலிடம் பெறுகின்றது. அதனால்தான் அதற்கு அப்பெருந் தகை முதலிடம் அளித்து முதலாவதாகக் குறிப்பிட்டார் என்று கருதலாம். குறளின் அதிகார எண்கள், பேருந்து எண்கள், காவலர் எண்கள், பள்ளி கல்லூரிகளில் மாணாக்கர் களின் எண்கள், வங்கிக் கணக்கு எண்கள், வீட்டு எண்கள் வருமான வரிக் கணக்கு எண்கள், சாலைப் பெயர்களின் எண்கள் போன்றவற்றில் ஆட்கள். இடங்கள் இவற்றின் பெயர்களை விட எண்களே முதலாவதாக இடம் பெறுகின்றன. கற்றவர்கள், கல்லாதவர்கள் உட்பட பாரிமுனை, அண்ணாசதுக்கம், அடையாறு முதலான இடங்களைக் குறிப்பிடாமல் பேருந்து