பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 106 பதின்மூன்று: மேனாட்டு மூடப்பழக்கப்படி கெட்ட எண். பதிநான்கு பதிநான்கு சாத்திரங்கள் சைவம் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருட இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிவாகரணம் என்பவை. பதிநான்கு உலகுகள் கீழ் ஏழு மேல் ஏழு) பதினாறு: மார்க்கண்டன் வயது, பதினாறு பேறுகள் மாடு செல்வம், மனை, மனைவி, மக்கள். கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள். போகம், புகழ் என்பன. கலையாத கல்வியும் என்று தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலில் இவை குறிப்பிடப் பெற்றுள்ளன. பதினெட்டு: ஆடிப் பதினெட்டு. பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் சித்தர்கள், பதினெண்கணத்தவர் அமரர், சித்தர், அசுரர். தைத்தியர், கருடர், கின்னரர். நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், யூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசயவாசியர், போகபூமியோர் ஆகியோர்) இருபது இருபா இருபஃது - முன்னர் வெண்பா வையும் பின்னர் ஆசிரியப்பாவையும் முறையாக வைத்து அவை ஒன்றோடொன்று சொல்லால் தொடர்நிலை நீங்காத வகையில் பாடப் பெறுவது. இருபத்தைந்து வெள்ளி விழா ஆண்டு. ஆண்டு விழா கொண்டாடப்பெறும், திருக்குறள் இன்பத்துப்பால் அதிகாரத் தொகை இருபத்தைந்து. இருபத்தாறு வைணவ தத்துவம், மனம், மெய், வாய் கண் செவி மூக்கு என 6 வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என