பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.3 செவியுணவு என்ற நூற்பாவை நினைந்து சொல்லியதாகும். 'ஈ' என்பது இழிந்தோன் உயர்ந்தோன்மாட்டு இரக்கும் சொல்லாம் 'தா' என்பது ஒப்போன் ஒப்போன் மாட்டு இரக்கும் சொல்லாம்: கொடு என்பது உயர்ந்தோன் இழித்தோன் மாட்டு இரக்கும் சொல்லாம். ஈண்டு மனம், வயிறு என்ற இரண்டும் உயர்ந்தோன், இழிந்தோன் என்ற இருவர்க்கும் ஒப்ப நின்றன."மனம் உயர்ந்த குறிக்கோளை யுடைய இலக்கியம் தத்துவம் இவற்றை நுகர்ந்து கொண்டிருக்கும்பொழுது வயிற்றில் ஏற்படும் பசியைப் போக்க வயிறு எனக்கு உணவு ஈ என்று பல் இளித்துக் கொண்டு உணவு கேட்கும் பிச்சைக்காரன் நிலையில் உள்ளது. அதனால்தான் ஈதல் வயிற்றது இழிவு நோக்கி நின்றது என்றார் என்பதை அறிய வேண்டும். நளவெண்பாாவில் ஒரு பாடல், சுயம்வரம் மண்டபத் தில் ஒவ்வொரு அரசனாக தமயந்திக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு வரும் தோழி அவந்தி நாட்டரசனை அறிமுகம் செய்யும் போக்கில், வண்ணக் குவளை மலர்வவ்வி வண்டெடுத்த பண்ணில் செவிவைத்த பைங்குவளை உண்ணாது அருங்கடா நிற்கும் அவந்திநா டாளும் இருங்கடா யானை இவன்.' என்ற பாடல் அமைகின்றது. நடுப் பகலில் கடுமையான வெயிலில் அலைந்து திரிந்த எருமைக் கடா ஒன்று ஒரு குளத்திற்கு வருகின்றது. அத்தடாகத்தில் நீலோர்ப்பல மலர்களுடன் கூடிய கொடியை விரும்பி நீரில் இறங்குகின்றது. கொடியை வாயால் பற்றி இழுத்தவுடன் அதில் தேன் எடுக்க 3. நளவெண்பா சுயம்வரக்காண்டம்-141.