பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பெரியாரின் துணை வள்ளுவர் பெருமான் அருளிய முப்பாலில் பொருட்பால் இவ்வுலக வாழ்வு - பொதுவாழ்வு - சீருடன் அமைய ஒருகலங்கரை விளக்குபோல, ஒரு துருவ மீன் போல வழிகாட்டிக் கொண்டிருப்பது. அதில் ஓர் இடம் பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரம் ஆகும். நம் காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியாரைப் போல ஒருவரை அல்லது பலரை நினைந்து இவ்வதிகாரத்தை அமைத்திருக்க வேண்டும் எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது. இல்லையா? நமது வாழ்வில் அறத்தின் பெருமையை உணர்ந்த வர்களாகவும் தம்மை விட அநுபவம் முதிர்ந்தவர்களாகவும் உள்ள பெரியோர்களின் துணைவேண்டியது மிகவும் இன்றியமையாதது. மாசற்றார் கேண்மை மிக மிக அவசியமானது முக்கியமானது. சர்.எ.எல். முதலியாருககுப் பிறகு ஈடும் எடுப்பும் அற்றவாறு செயற்பட்ட தாமரைச் செல்வர் நெது. சுந்தர வடிவேலு அவர்களும், மக்கள் தலைவர் - முதல் அமைச்சர் காமராஜ் அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் ஆசியையும் ஆலோசனையும் பெற்றவர்கள். அவர்கள் இருவரின் மனமும் தூய்மை யுடையதாக இருந்தது. அறிஞர்களின் பாராட்டையும் பொது மக்களின் புகழ் மாலைகளையும் பெற்றார்கள் அவர்கள். காரணம். தந்தை