பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 116 பெரியாரின் மாசற்ற கேண்மை இருந்தமையால், எள்ளளவும் சயநலமின்மை வலிய வந்த முதலமைச்சர் பதவியையும் ஆளுநர் பதவியையும் வேண்டாவென ஒதுக்கியமையால் அறியலாம். பொது நல நோக்கும் பகுத்தறிவுச் சிந்தனையும் உண்மையிலேயே பெரியார் என்று போற்றத் தக்கவராகத் திகழ்ந்தார். அறத்தின் பெருமையை உணர்ந்தவர்களையும் தம்மைவிட பட்டறிவு முதிர்ந்தவர்களாக உள்ளவர்களையும் அறுதியிட்டு அவர்களுடைய துணையை முறை அறிந்து கொள்ள வேண்டும். அறன்.அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல் (441) என்பது வள்ளுவம். அடுத்த குறளில் 442 "உற்றநோய் நீக்கி உறாமை முற்காக்க"வல்ல தன்மையினாரைத் துணை கொள்ள வேண்டும் என்கின்றார். உற்ற நோய் என்பதற்குப் பரிமேழலகர் தெய்வத்தானாதல் மக்களானாதல் வரும் துன்பங்கள் என்று கட்டுவார். தெய்வத்தால் வரும் துன்பங்கள். மழை இன்மை யினால் வருபவை, காற்று, தீ, பிணி என்றவற்றால் வருவன என்று விளக்கி அவற்றை நீக்கும் முறைகளையும் உறுதிப் படுத்துவர். கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளால் நீக்கப்பெறல் வேண்டும் என்று விளக்குவார். மக்களால் வரும் துன்பங்கள் பகைவர், கள்வர், சுற்றத்தார், வினை செய்வார். இவர்களால் வருவன. அவை சாம, பேத, தான, தண்டங் களாகிய நால்வகை உபாயங்களுள் ஏற்றவற்றைக் கொண்டு போக்குதல். முற்காத்தலை விளக்கும் முறை தெய்வத்தால் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து 1. பில்லிருனியம், ஏவல் முதலியவற்றால் செய்விப்பவை.