பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 118 பெருக்கிக் கூறுவர் அவர்களாலும் பயன் இல்லை. வேறு சிலர் தலைவன் யார் என்ற கவலையே இல்லாமல், பொது நன்மையை யே கருத்தில் கொண்டு நன்மை தீமைகளை நடுநிலையிலிருந்து எடுத்துக் கூறி, தவறு கண்டபோது கடிந்து திருத்த முயல்வர். இத்தகைய அநுபவம் மிக்க பெரியவர்களின் துணை இருந்தால் அந்தத் தலைவனைக் கெடுக்க வல்ல பகைவர் ஒருவரும் இரார். அங்ங்ணம் இடித்துக் கூறித் திருத்தும் பெரியவர்களின் துணை இல்லாத தலைவன் கெட்டழிவான். தீமை செய்யும் கைவர் இல்லாவிடினும் அவன் எளிதில் கெடுவான். இடிக்குத் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (447) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (448) என்பவை அப்பெருமானின் பொன்மொழிகள்’ இங்கிலாந்து முதலிய சில நாடுகளில் அறிஞர்களின் பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் சிறிதும் தடை இல்லை. சில நாடுகளில் பேரறிஞர்களும் வாழ்வு இல்லாமல் நாடு கடத்தும் நிலை இருந்து வருகின்றது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பெர்னாட்ஷா எச்.ஜி. வெல்ஸ் என்னும் அறிஞர்கள் இருவரும் இங்கிலாந்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தின் பலவகை முயற்சியைக் குறை क, क्लष्ठळमव्ठक्लब्Tब्ब्ठल्नेछब्तब्धा எல்லா நாடாளுமன்றங்களிலும் எதிர்கட்சியில் உள்ளவர்கட்கு இதுவே கடமையாக உள்ளது. இந்த முறை பொய்க்குப்பொய்யே மருந்தாக ஆள்வோரின் பொய்க்கு எதிர்ப்போரின் பொய்யே வளர்வதாக இருப்பதால், இதிலும் உண்மை இல்லை.இன்று தொலைக்காட்சியில் இவர்தம் வண்டவாளங்களை நேரில் காணலாம். 8. இவையாவும் அரசனுக்குக் கூறியவையாக இருப்பினும் இல்லத் தலைவர்கள், கட்சித்தலைவர்கள் முதலிய அனைவர்க்கும்பொருந்தும்.