பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii சொல் இத்திருக்குறளில் மூன்று இடங்களிலும் கடைசி இரண்டு இல்' எனும் சொற்கள் இல்லை என்ற எதிர் மறைப் பொருளிலும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இல்லாள்கண் இணைந்த இல் இல்லத்தைச் சுட்டுகிறது. இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள். 'இல்லத்த சி' 'வாழ்க்கைத் துனை மரபு முறை யில் மனைவி ன பொருள்படும். இல்லான் இல்லானுக்கு இணையாக இயம்ப இயலாது. இல்லான் என்றால் இல்லாதவன் என பொருள் படும். இல்லாளுக்கும் இல்லானுக்கும் இடையே அறியப் படும் வேறுபாட்டை தமிழறிஞர் ரெட்டியார் தெளிவாகத் தெரிவிக்கிறார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் (69) என்ற இத்திருக்குறளுக்குப் பேராசிரியருடைய விளக்கம் நெஞ்சத் தினுள் தஞ்சம் புகுகிறது. ஈரைந்து திங்கள் சுமந்து, ப்ேறு நேரம் நெருங்கி, குழவி தாய் கருப்பையிலிருந்து வெளி யேறும்போது, ஏற்படும் உடலியல் நிகழ்வுகளை, உடற்கூறு மாறுபாடுகளை, தாய்சேய் நல மருத்துவர்போல் மூதறிஞர் விவரிக்கிறார். இத்துணை அறிவைத் தமிழறிஞர் எவ்வாறு ஈட்டி விளக்குகிறார் என்ற வினா எழுகின்றது. மகனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன், கற்றவர்கள் குழுமிய அவையில் தன் மகன் முதன்மையாக சிறப்பாக விளங்கும் நிலைக்கேற்ப அவனை உருவாக்கி முன்னிலைப்படுத்தல் மகனுக்குத் தந்தை நல்கும் நன்மை என்று முப்பாலாசிரியர் மொழிகிறார். தந்தை செவிவழி மகனின் மாட்சிமையை அறியும்போது மகிழ்ந்து மனநிறை வெய்துகிறார். ஆனால் தாயின் எதிர்பார்ப்பு வேறு மது, மாது மற்றும் சூது