பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 122 அச்ச உபதை ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பிவைத்து. இவர்கள் ஏதோ சூழ்ச்சியின் பொருட்டுக் கூடினர் என்று அவர்களைச் சிறையில் இட்டு, ஒருவனால் இவ்வரசன் முதலமைச்சன் நம்மை வஞ்சித்துக் கொல்லு விப்பதற்கு ஆலோசிப்பதனால், நாம் சிறையிலிருந்து தப்பி அதனை முற்படச்செய்து நமக்கினிய அரசன் அமைச்சன் ஒருவனை வைத்தல் ஈண்டையாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்ன எனச் சொல்லுவித்தல். இந்த நான்கு முறையினாலும் ஒருவனது மனம் மாறவில்லை என்று தெரிந்த பிறகு, அவன் எதிர்காலத்திலும் மனம் மாறான் என்ற கருத்தளவையால் தெளியப்படும். ஒருவனுடைய அறிவை ஆராயும்போது அடிப் படையான ஓர் உண்மையை மறத்தல் ஆகாது. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இந்த உலகில் இல்லை. அதல்ை சிறந்த அறிஞரிடத்திலும் சிறிது அறியாமை இருப்பது இயல்பு. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (503) வெளிறு - வெண்மை அறியாமை) என்பது பொய்யா மொழி. இந்த உண்மை விளங்கினால் ஒருவரை ஆராய்வது எளிதாகும். அவன் எவ்வகையில் அறியாமையுடையவன் என்பதையும், எவ்வகையில் அறிவு தெளிந்தவன் என்பதை யும் ஆராயலாம். இல்லையானால் வெறுப்பின் காரணமாக