பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 128 என்பது வள்ளுவம். இது பொருளதிகாரத்தில் அமைந் திருக்கும் பொன்னனைய கூறுடையது. ஒருவரை ஒருவர் நோக்கும் பார்வையிலேயே உள்ளத்தின் நெகிழ்ச்சி புலப்படும். இஃது அன்புலகின் ஒரு கூறில் அடங்குவது. இந்தக் கண்பார்வையால்தான் அன்பு கொண்டு பழக முடிகின்றது. மக்கட்குப் பிறவியிலேயே இக்கண்ணோட்டம் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே மக்கள் நூற்றுக்கணக்காகவும், பல்லாயிரக் கணக்காகவும் சேர்ந்து பழகவும் கூடி வாழவும் முடிகின்றது. விமானப் போக்குவரத்து வசதிகள் ஏற்பட்ட பிறகு கண்டங்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அமைந்துள்ள சமுதாயங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. அமெரிக்கா, இரஷ்யா, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாட்டு மக்கட் சமுதாயங்களுடன் இந்திய சமுதாயங்கள் உறவு கொண்டு வருவதையும் கண்டு மகிழ்கின்றோம். பகையும் பூசலும் பெருக்குவது மக்களுக்கு இயல் பான பண்பு அன்று. யாரோ சிலர் தன்னலம் கொண்டு தலைமை பெற்று மற்றவர்களை ஏய்த்துத் துண்டினால் பகையும் போரும் அவ்வப்போது நேரிடுகின்றன. தன்னலம் உள்ளவர்கட்குத் தலைமை இல்லாமல் செய்ய வல்ல அறிவும் ஆற்றலும் மக்களிடம் ஏற்படுமானால் போருக்கு வழி இல்லாமல் போய்விடும் போருக்கு ஆள் திரட்ட ஒரு தலைவன் முயன் றால், மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து போர்செய்ய மறுத்து விடுவார்கள் தலைவன் வற்புறுத்தினால், அவனுடைய தலைமையை ஒழித்து. போர் வேண்டா என்று அமைதியை நாடும் ஒருவனையே தலைவனாக்கிக் கொள்வார்கள். நாட்டுப் பற்று, சமயப் பற்று என்று பலவாறு கவர்ச்சியூட்டும்