பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 நாகரிக ஏணி இல்லை என்றும் இயம்புகின்றார் 1572. இவ்வளவு சிறப்புடைய நெகிழ்ச்சி கண்ணில் புலனாவதால் கண்ணைச் சிறப்பித்து 'கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் என்றும் அஃது இல்லாத கண் நோய் தரும் புண்ணே என்றும் புகல்கிறார்:575. இவ்வாறு பயனற்ற கண்களையுடைய வர்கள் கணுவையுடைய மரம் போன்றவர் என்றும் கழறு கின்றார் 575). இங்ங்னமெல்லாம் கூறிய வள்ளுவர் பெருமான் ஆட்சிப் பொறுப்பிலுள்ள தலைவன் கண்ணோட்டம் உடை யவனாக இருக்க முடியுமா? என்பதைத் தெளிவிக்கின்றார். பொதுக் கடமைகளைத் தான் மேற்கொண்டிருக்கும்போது பழகியவர்களும் சில சமயங்களில் இடையூறு செய்ய முற்படுவர், அவர்கள்மேல் சினங்கொண்டு மாறுபடலாம் என்று தோன்றும். ஆனால் பழகியவர்களாக இருப்பதால் மனம் இயல்பாக நெகிழ்ந்து நிற்கும். இடையூறு செய்கின்றவர் களிடத்திலும் கண்ணோட்டம் உடையவனாக இருக்கலாம். ஆனால் தான் மேற்கொண்ட கடமை கெடாதவாறு காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட வல்லவர்கட்கு இந்த உலகம் உரிமையானதாகும் என்பது அப்பெருமானின் கருத்து ((578). சிலசமயம் இடையூறு செய்கின்றவர்கள் அளவு மீறிச் செய்வதுண்டு. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை ஒறுக்கவும் முடியும். ஆனால் அப்போதும் பழகியவர்கள் என்ற காரணத்தால் பொறுமையைக் கடைப் பிடித்துக் கண்ணோட்டம் உடையவனாக இருப்பதே சிறந்த பண்பாகும் என்று கருதுகின்றார் வள்ளுவர் பெருமான் (579). தனக்கே இடையூறு செய்கின்றவர்கள் தன்னுடன் பழகியவர்களாக இருந்தால் தான் தலைவன் என்ற உயர்நிலை