பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 130 யில் இருந்தாலும் பொறுத்துக் கண்ணோடுவது நல்லது என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து. பொதுக் கடமைகளை மேற்கொண்டு செய்யும் போது தன்னைப் போன்ற அறிவும் ஆற்றலும் உடைய சிலர்க்குப் பொறாமை ஏற்படுவதும், அதனால் அவர்கள் இடையூறு செய்வதும் இயற்கை. அப்பொழுதெல்லாம் தலைவன் சினங்கொண்டு தண்டிக்க முயல்வது கூடாது. தன் பொதுக்கடமை கெடாதவாறு காத்துக் கொள்வது மட்டும் போதும், நாளடைவில் இடையூறு செய்பவர்கள் பொறாமை மாறி அன்பு கொண்டு திருந்தக் கூடும். ஏன்எனில் அவர்கள் கொண்ட பொறாமைக்குக் காரணம் தன் செல்வாக்கும் உயர்நிலையுமே அல்லாமல், தனிப்பட்ட முறையில் தன்மீது அவர்கட்குப் பகையும் காழ்ப்பும் இல்லை. தானும் அந்தத் தலைமைப் பொறுப்பைத் தன் நன்மைக்குப் பயன்படுத்தாமல் பொது நன்மைக்குப் பயன்படுத்திச் செருக்கின்றி வாழ்ந்தால் இடையூறு செய்கின்றவர்கள் தம் தவற்றினை உணர்ந்து அன்பு கொள்ளத் தலைப் படுவார்கள். ஆதலின் அவர்களிடத்தில் கண்ணோட்டம் கொள்வதே தலையாய பண்பாகும். ஒருக்கால் அவர்களில் சிலர் திருந் தாமல், மேன்மேலும் பொறாமையே கொண்டு, அன்பு துறந்து, தன உயிருக்கே உலை வைப்பவர்களானால், அப்போதும் கண்ணோட்டமே சிறந்தது என்கின்றார் வள்ளுவர் பெருமான். இதனை நன்கு விளக்கும் பொருட்டு, பழகியவர்கள் தனக்கு நஞ்சு இடுவதைக் கண்ணால் கண்டும் கண்ணோட்டத்தால் மறுக்க முடியாமல் அதனை உண்டு அமைதியுறுவதே நல்லது என்று நவில்வார். பெய்க்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (580) என்பதில் இதனைக் காணலாம்.