பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133. நாகரிக ஏணி இங்ங்ணம் அமைதி அடைவது நல்லது என்று மட்டும் அப்பெருமான் கூறுவில்லை. அதற்குமேலும் கூறுவதுதான் அற்புதம். அது விரும்பத்தக்க நாகரிகம் உடையவர்களின் செயல் என்பதாகவும் குறிப்பிடுகின்றார். அப்பெருமான் நாகரிகம் என்ற சொல்லைக் குறிப்பிடும் போது மனப்பண் பாட்டையே கருதுகின்றார். நாகரிகம் பற்றி பெரும்பாலோர் கொண்டிருக்கும் கருத்துக்கு இது முற்றிலும் வேறுபட்டது. உண்பதிலும் உடுப்பதிலும் உறையுள் அமைப்பதி லும் பிறவற்றிலும் பெற்றுள்ள மாறுதல்களையே முன்னேற்றம் என்று எண்ணி, அவற்றையே நாகரிகம் என்று பெரும் பாலோர் போற்றுகின்றனர். ஆனால் வள்ளுவர் பெருமானும் மற்றச் சான்றோர் பெருமக்களும் புறவாழ்வில் நிகழும் மாறுதல்களை நாகரிகமாகக் கருதவில்லை. அகவாழ்வில் ஏற்படும் நல்ல பண்புகளையே - நெஞ்சின் உயர்நிலைகளையே - அவர்கள் நாகரிகத்தின் கூறுகளாகக் கொள்ளுகின்றனர். வள்ளுவர் பெருமான் கருத்துப்படி உயர்வகையான பல்லடுக்கு மாளிகை யில் வாழ்வது நாகரிகம் அன்று தாம் மாடி வீட்டில் வாழ்ந்தாலும் பொத்தல் குடிசைகளில் வதியும் மக்களோடு பழகி, பழகிய காரணத்தால் கண்ணோட்டம் உடையவர்களாக வாழ்வதே நாகரிகம். பகட்டான ஆடை அணிகளை அணிந்து ஒய்யார மாகத் திரிவது நாகரிகம் அன்று தம்மொடு பழகிய வர்கள் கந்தல் உடுத்துக் கிடந்தாலும் அவர்களைத் தம்மைப் போல் மதித்து நெஞ்சம் நெகிழ்வதே நாகரிகம். அறுசுவை உணவு உண்டு களிப்பது நாகரிகம் அன்று தம்மொடு பயின்றவர்கள் உப்பிலாக் கூழ் குடிப்பவர்களாயினும் அவர்களைத் தம்போல் மதித்து, உள்ளம் உருகி இயைவதே நகரிகம். இந்தப் பண்பு