பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 132 எல்லா மக்களிடத்திலும் ஓரளவு அமைந்துள்ளது. ஆனால் புறவாழ்க்கையின் போக்கு இந்த நெஞ்சப் பண்பாகிய நாகரிகத்தை வளரவொட்டாமல் நெருக்கி அடக்குகின்றது. இந்த அடக்கு முறையையெல்லாம் தகர்த் தெறிந்துவிட்டு இந்த நாகரிகம் முதிர்ந்த நாகரிகமாக நிற்கும்போது பிறர்வருந்தாமல் வாழட்டும் என்று அதற்காக அவர்கள் இட்ட நஞ்சையும் உண்டு தன் உயிர் வேதனை தெரியாமல் அவர்கள் வாழட்டும் என்று அமைதியும் பூண்டு மகிழ்கின்றார்கள். அவர்களிடம் வெறுப்போ சினமோ கொள்ளாமல் அவர்களைத் தண்டிக்காமல் இருக்கும் பண்பு, அவர்களை விட்டுத்துறக்காமல் மேலும் அவர்களோடு பழகும் பழக்கம், அவர்கள் தம்மைக் கொல்லச்சூழ்ந்து நஞ்சு இடுவதைக் கண்டும் பொறுத்திருக்கும் ப்ொறையுடைமை, அதை எடுத்து உண்ணத் துணியும் துணிவு, துணிந்து உண்ட பின்பும் தன் உயிர் வேதனையை அவர்கட்குப் புலப்படுத்தி அதனால் அவர்கள் வருந்தும்படியாகச் செய்யக் கூடாது என்று தம் துன்பத்தைத் தமக்குள் அடக்கிக் கொண்டு அமையும் போக்கு. இவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்க, மனப்பண்பாடு என்னும் நாகரிகம் படிப்படியாக வளர்ந்து நாகரிகத்தின் கொடு முடியை எட்டுகின்றது. கண்ணோட்டமே அதனை அளந்தறியும் அற்புதக் கருவியாகவும் அமைந்து மன்பதைக்கு என்றும் அழியாக் கலங்கரை விளக்காகவும் திகழ்கின்றது.