பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் #38 மற்றவர்கட்கும் எடுத்துச் சொல்லி உணர்த்த வேண்டும் இன்புறுவது உலகு இன்புறக் 9ே9 காண வேண்டும் உண்மையாகக் கற்றவர்களின் நோக்கம். ஆகவே கற்றவற்றைப் பிறர்க்கு உணர்த்தும் திறமை வேண்டும். இஃது எல்லாது வரும்? ஒரு நூலைக் கற்கும் போது தெளிவாகக் கற்று உணர்ந்ததால், அந்தத் தெளிவு நெஞ்சில் இருந்தால், அது வேண்டியபோது வெளியிடக் கூடியக் கல்வியாகும். உள்ளத் தின் தெளிவு எப்போதும் உரைப்பதில் புலனாகும். எண்ணத் தெரிந்தவர்களுக்குப்பேசவும் தெரியும். எண்ணத்தில் குறை இருந்தால்தான், உள்ளத்தில் தெளிவு இல்லாமல் இருந்தால்தான் பிறர்க்கு உணர்த்த முடியாத நிலை இருக்கும். ஆகையால் எண்ணிக் கற்கவேண்டும்; தெளிவாகக் கற்று உணர வேண்டும். அப்போதுதான் தாம் கற்றவற்றைப் பிறர் உணருமாறு விரித்து உரைக்க முடியும்; அவ்வாறு சொல்ல முடியாவிட்டால், கொத்துக் கொத்தாகப் பூத்து நிற்கும் மணம் கமழாத மலர்களைப்போல் அவர்கள் பயனற்றவர்களே. இணக்கிகழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துரையா தார் (650) என்பது இவர்களைச் சுட்டி நிற்கும் வள்ளுவம். ஆங்கில soft'ssif oğaff Gus (pu logy, Conceive, 1 Conceive . . . «Togy. Loopop Qārāya, QPugigi...but nothing was delivered என்பதாக எப்போதோ எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது.