பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் இருப்பது மக்களாட்சி நடைபெறும் காலம். மேடைப் பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள காலம். திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்தவை. வள்ளுவர் பெருமான் தம் நூலில் அவையறிதல் - அதி:72. குறிப்பிடும் கருத்துகள் அறிஞர்கள் கூட்டத்திற்கு பொருந்துவனவாக உள்ளன. ஒரு பொருளை எடுத்து விளக்க வேண்டுமாயின் யாருக்குச் சொல்லுகின்றோம் என்று ஆராயாமல் பேசுவது கூடாது. அதனால் ஒரு பயனும் இல்லை. ஆகையால் சொற்களின் தொகுதியை அறிந்த தூயவர்கள் மன்றத்தின் கூடியிருப்போர் நடுவே தன்மையை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி ஆராய்ந்து சொல்ல வேண்டும். அதுவே எல்லாச் சொற்களையும் பயன்படுத்த அறிந்தவர் களின் கடமையாகும். அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த துய்மை யவர் (71.1) என்பது வள்ளுவர் காட்டும் வழி. இவ்விடத்தில், கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து உரைப்பர் வித்தகர்' என்ற பழமொழியினையும் சிந்திக்கலாம். 1. பழமொழி - 400 (4)