பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பணப்பெருக்கம் ஆசைகளில் பலவகை உண்டு. பண்டையோர் மண்ணாசை பெண் ஆசை, பொன்னாசை என்ற மூன்றில் அனைத்தையும் அடக்குவர். சிற்றுர்களில் ஏழைகட்கு ஈடு நிலம் மேல் செல்வர்கள் கடன் கொடுத்து, அந்த ஏழைகள் அசலும் வட்டியும் திருப்பித் தராத நிலையில் ஈட்டுக் குரிய நிலத்தை தம் பேருக்குக் கிரயம் எழுதிக் கொள்வார்கள். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் தில்லு முல்லுகளாலும் கையூட்டு முறைகளினாலும் சம்பாதித்த பணத்தை பூமி வாங்கி பூமித்தாயைக் களங்கப்படுத்துவர். இது மண் ணசையைச் சேர்ந்தது. பெண்ணாசையையுடையவர் பல் வேறு ஒழுக்கச் சீர்கேடுகள் புரிந்து கற்பழிப்பு, பருவம் எய்தாத மகளிர்க்குப் பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு அழியாப் பழிகளைச் சுமந்து சமூகத்தினால் இழித்துப் பேசப் பெறுவர். பொன்னாசை என்பது பணத்தாசையால் மக்கள் செய்யும் இழி செயல்கள் சொல்லி முடியாது. வங்கிக் கொள்ளை, வங்கியிலுள்ளோரே புரியும் தில்லுமுல்லுகள், பதவிகளில் உள்ளவர்கள் புரியும் பல்வேறு இழிசெயல்களால் திரட்டும் பணம் முதலியவற்றை நாம் அன்றாட நிகழ்ச்சிகளாகக் காண்கின்றோம். பனம்பணமென் றனுதினமு படுபேயாய்ப் பறந்தோடிப் பரித பித்துக் கணம்தெரியா துழல்கின்றார் காலன்வரு கணம்தெரியார் கரவே சூழ்ந்து