பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 144 இவ்விடத்தில் ஒன்றை உன்னிப்பாகக் கருத வேண்டும். சிந்திக்க வேண்டும், அறிவுடையவராக வேண்டும் என்று முயன்றால் அதில் தவறுகள் நேரிடா அறிவுடையராகத் திகழ்வதற்குச் சான்றிதழ் வேண்டும் என முயன்றால் பல்வேறு தவறுகளில் கொண்டு செலுத்தும். தேர்வுகள் எழுதாமலே சான்றிதழ்கள் பெறும் நிலைக்குக் கொண்டு செலுத்திவிடும். குமுதம் உளவறிகுழு (Detectiveteam) பத்தாயிரம் ரூபாய் தந்து காந்தி பெயரில் சென்னைப பல்கலைக்கழக Ph.D பட்டம் பெற்றதை நாடறியும் செய்தித்தாளில் வெளிவந்த செய்தி. அங்ஙனமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முயன்றால் கையூட்டு முதல் எத்தனையோ தில்லுமுல்லுகளில் கொண்டு செலுத்தி விடும். இவையெல்லாம் பண்டமாற்று முறை மாறி பண மற்று முறை நடைமுறைக்கு வந்தபிறகு ஏற்பட்ட அக்கிர டிச் செயல்கள். திருவள்ளுவர் பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறும் கருத்துகளை அறிந்து தெளிய வேண்டுமானால் உழைப்பையே பொருளாகக் கருதும் கருத்து வேண்டும். இல்லையேல், எப்படியாவது பணம் சேர்த்தவர்க்கே உலகத்தில் மதிப்பு உண்டு என்று பொருள் தோன்றும் அறம் ஓதிய வள்ளுவர் பெருமானே இவ்வாறு பொருளை பெரிதாகப் போற்றுகின்றாரே என்ற முரண்பாடு தோன்றும். அது தவறு உழைத்து அற நெறியில் வந்த பொருளைப் பற்றியே அவர் இந்த அதிகாரத்தில் கூறுகின்றார் என்பதைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். இங்கும் பொருள் செயல் வகையை ஒதும்போது அறத்தை நன்கு வற்புறுத்துகின்றார். செய்யும் திறம் அறிந்து