பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 懿领 போன்றதே 650 என்றும விளக்கியுள்ளதை ஈண்டு பொருந்த வைத்து உணர்தல் வேண்டும். அருள் நெறியை மறவாமல் பொருளை ஈட்ட வேண்டும் என்று கூறிய பெருமான் அந்தப் பொருள் அருளை வளர்க்கப் பயன்படவேண்டும் என்றும் கூறுகின்றார். அன்பு என்னும், பண்பினிடம் பிறந்து வாழ்வது அருள் என்றும் அருள் குழந்தை என்றும், அத்தகைய குழந்தையைச் செவி லித்தாய்போல் காப்பாற்றி வளர்ப்பது பொருள் என்றும் கட்டுவார். அருள் என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியல் உண்டு (757) - என்பது அவர் காட்டும் சுட்டொளி வீசும் பொய்யாமொழி, இதனைப் பலமுறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒரு நாட்டில் உழைத்துத் தொழில் செய்கின்ற வர்கள் பருகிப் பெரு வளத்தை மிகுதிப் படுத்தினால் பகைவர்கள் திர்க்கவும் முன்வர மாட்டார்கள். இதனால்தான் பொருளாதார நிபுணர்கள் ஒரு நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். தொழில்சாலைகள் பெருகினால் வேலை வாய்ப்புகள் பெருகும். இத்தகைய தொழிற்சாலைகளை சிற்றுர்ப்பக்கங்களிலும் தொடங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்போதுதான் அப்பக்கங்களில் வேலை புகள் ஏற்படும். நாட்டுப் புறமக்களும் பொருளாதார நிலைகளில் உயர்வார்கள். தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்புகளை மிகுதிப்படுத்த வேண்டுமேயொழிய தலைமைச் செயலகம், மாவட்ட அலுவலகங்கள், வட்ட “, ";ن . 慧 تمتم: