பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 3.50 மிகினும் குறையினும் நோய்செயும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று (941) என்ற பொய்யாமொழியில் இவண் குறிப்பிட்ட மூன்றில் ஒன்றே இரண்டோ மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும் என்பதைத் தெரிவிக்கின்றார். இஃது ஆயுர்வேத நூலில் கண்ட உண்மை என்பதையும் சுட்டுகின்றார். நூலோர் ஆயுள் வேத நூலைப் படைத்தவர்கள். இதனை இக்கால மருத்துவ முறைப்படி உணவின் அளவு என்று கொண்டு அளவுக்கு மீறி உண்டால் (மிகினும் செரிமானம் இன்றி வயிற்றுப் போக்கோ வாந்தியோ ஏற்படலாம் என்றும், அளவு குறைந்து உண்டால் உடலுக்கு வேண்டி கலோரி வெப்பம் குறைந்து உடலில் பல்வேறு சீர் கேடுகளை உண்டாக்கும் என்றும் கூறுவதில் தவறில்லை. முன் உண்ட உணவு எவ்வாறு அற்றது (செரிமானம் ஆனது என்பதை ஆராய்ந்து அறிந்து அந்த அறிவைக் கடைப்பிடித்துப் போற்றிப் பிறகு அடுத்த வேளைக்கு உரிய உணவை உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் உடம்பிற்கு மருத்து என்ற ஒன்று தேவை இல்லை. மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் (942) என்பது வள்ளுவம். இதனையே காமத்துப் பாலிலும், உணவினும் உண்டல் அறல் இனிது (1326) என்று வேறொரு விதமாகக் குறிப்பிடுவர். அதனையும் ஈண்டு ஒப்பவைத்து சிந்தித்தால் மேலும் தெளிவு பிறக்கும். முன் உண்ட உணவு செரிமானம் ஆன பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவுதான்வேண்டும் என்று உறுதி