பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 氯52 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுப்பாடு இல்லை உயிர்க்கு (945) என்பது மேலும் புத்தொளிவிசி நிற்கும் வள்ளுவம் மறுத்து உண்ணின் என்பது பன்முறை சிந்திக்க வேண்டியதொன்று. உடலுக்குத் தேவையான உணவை ஆராய்ந்து தெளிந்து அந்த உணவின் குறைந்த அளவு இன்னது எனறு உறுதி செய்து உண்கின்றவரிடம் இன்பம் உடல் நலம் தலைதுக்கி நிற்கும். அதுபோல மனத்தின் விருப்பத்திற்கு இயைந்து அளவு மீறி மிகுதியாக உண்பவனிடம் நோய் தலைக்காட்டி நிற்கும். இரையை அளவின்றி எடுத்து அதனால் வருந்தும் விலங்கோடு ஒத்தலின் இரையான் என்றார் என்பது பரிமேலழகரின் விளக்கக் குறிப்பு. இழிவு அறிந்து உண்பன்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் (945) என்பது ஆழ்ந்து பன்முறை சிந்தித்து அசைபோட்டு அறிய வேண்டிய அற்புத வள்ளுவம். பசித்தீயின் அளவிற்கு ஏற்றவாறு உண்ணாமல் நாவைக் கட்டுப் படுத்தாமல் ஒன்றையும் ஆராயாமல் அளவு மீறி மிகுதியாக உண்டால் நோயும் எல்லை மீறித் தலைக் காட்டும் தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோய்அளவு இன்றிப் படும் (947) என்பது வள்ளுவம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு என்ற பழமொழியை ஈண்டுச் சிந்திக்கலாம். பசியைப் இன்னும் பண்டம் தீனி என்பது; வயது வந்தோர் உண்பது 'உணவு என்பது. விலங்குகள மேய்வது 'இரை' என்பது. மனிதன் அளவின்றி உண்பதை இரை' என்று குறித்தார்.