பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. பெரியாரை மதித்தல் இப்பூவுலகில் சிலர் அறிவும் ஆற்றலும் மிக்கவர் களாக உள்ளனர். அவர்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களை அவமதித்துப் பிழை செய்வதால் வரும் இடரும் அழிவும் தாங்க முடியாதனவாக இருக்கும். ஆகையால் தம்மைக் காத்துக் கொள்ளும் முறைகளில் தலையாயது எது என்றால் ஆற்றல் உடையவர்களின் ஆற்றலை இகழாமல் பதேயாகும். ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை (891) ன்பது பொய்யாமொழி. அவர்களைப் போற்றி வாழ்வது ఖీ திேயுடையார் செயல். இத்தகைய பெரியார்களைப் போற்றாமல் நடந்தால் அவர்களால் நீங்காத துன்பம் வரும். இதனை விளக்கி நிற்பது பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரள இடும்பை தரும் (892) என்ற பொய்யாமொழி. ஆற்றல் உடையவர்களுக்கு ஆற். லற்றவர்கள் தீமை செய்தால் அது வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும். மற்றும் அது எமனை 'ஒல்லையில் வி வ என்று கைகாட்டி அழைப்பது போலாகும். நெருப்பினால் சுடப் பெற்றாலும் ஒருவாறு தப்பி