பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. நோயற்ற வாழ்வு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது ஒரு பொன்மொழி. இவ்வுலகப் பொதுவாழ்வில் உள்ளத்தின் உறுதியும் அறிவின் தெளிவும் கெடாமல் காத்துக் கொள்ள வேண்டுமானால் உடலைப் போற்ற வேண்டும். மருந்து" என்னும் அதிகாரத்தில் அதிகாரம் - 95 சில வழிவகைகளை வகுத்துக் காட்டுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. இங்கு 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 942 என்று நம் கவனத்தை ஈர்க்கும் அப்பெருமான் நாம் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகளையே பேசுகின்றார். முதல் ஏழு குறளில் நோயின்றி வாழ வழிகாட்டிய பிறகு வந்த நோயைத் தக்க மருந்துகளால் உடனே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கும் வழிகளை அமைத்துக் காட்டுகின்றார். அதிகாரத் திற்கு மருந்து என்னும் தலைப்பு கொடுத்திருந்தாலும் மருந்து வேண்டாத வாழ்வையே வற்புறுத்துகின்றார். 'நாவடக்கம்' என்ற ஒரு பண்பு உண்டு. பேச்சில் நாவடக்கத்தைக் கடைப்பிடித்தால் உள்ளத்திற்கு நல்லது உகந்தது. உணவில் அதைக் கடைப்பிடித்தால் உடலுக்கு நல்லது. ஆனால் இந்நெறிகள் எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாது என்ற குறிப்பும் அப்பெருமான் லாக்கில் உண்டு.