பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் iół பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவருடைய கையில் நாடிபார்த்து அவருக்கு உற்ற நோய் இன்னது என்று உறுதி செய்ய முடியும். அவ்வாறு காணும்போது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்றும் மிகாமலும் குறையாமலும் இயல்பான அளவில் அமைந்து இருந்தால் நோயற்ற நிலை உறுதி செய்யப்பெறும். இம்மூன்றில் ஒன்றோ இரண்டோ மிகுந்திருந்தாலும் குறைந்திருந்தாலும் நோய் உண்டாகும் என்று கண்டார்கள். மிகினும் குறையினும் நோய்செயும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று (941)" என்பது வள்ளுவம், இந்த மூன்றும் மிகாமலும் குறையாமலும் சம அளவு இருக்க வேண்டுமானால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகளையும் உரைக்கின்றார். வாதம் மிகுந்திருப்பதாகத் தெரிந்தால் வாயு விளைவிக்கும் பொருளை உண்ணலாகாது. பித்தம் மிகுந்திருப்பது தெரிந்தால் பித்தம் விளைவிக்கும் பொருளை உண்பதைத் தவிர்த்தல் வேண்டும். சிலேத்துமம் மிகுந்திருப்பது தெரிந்தால் கபம் உண்டாக்கும் ஈரப்பொருளை உண்ணக் கூடாது. இவ்வாறே ஒன்று குறைந்தால் அதை ஈடு செய்யும் பொருளைத் தேடி உண்ணுதல் ஆகிய இந்த முறையைக் கடைப்பிடித்தல் உண்டு. இஃது அவ்வளவு சிறந்த முறையன்று. இதன் விளக்கம் உண்கின்ற உணவுக்கு வாதம் முதலியவை நேரிடுகின்றன என்பது மட்டும் முழு உண்மை அன்று. உண்கின்ற உணவைச் செரிக்கச்செய்து ஏற்றுக் 1. மருத்து-1