பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露73 மாணமிகு வாழ்க்கை சிலரிடம் இருப்பதால்தான் உயர்ந்த கொள்கைகள் உலகில் நிலைபெற்று நிற்க முடிகின்றன. மானம் உடையவர்கள் தம் உயிர் வாழ்வைப் பொருளாகக் கருதாமல் உயர்ந்த கொள்கைகளைப் போற்றி ஒழுகுவதால் மக்கள் வாழ்க்கை பெருமையுடையதாக விளங்குகிறது. உணவு முதலியபற்றிய விலங்குப் போராட் டத்திற்கு இடையே நாகரிகமும் நிலை பெற்று வாழ்ந்து வருகின்றது. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும். பிறன் பழித்தான். உதைத்தான் என்று அவற்றால் உண்டாகும் மானம் சிறந்த மானம் அன்று. தவிர, பிறன்பழி உதைத்தல் முதலியவற்றையும் பொறுக்கும் பண்பே மானம் சிறந்துள்ளவர்களிடம் காணப்படு கின்றதே அன்றி பிறர் செய்தவற்றிற்கெல்லாம் கொதித்துத் தீமை செய்ய எழும் தன்மை காணப் படுவதில்லை. இவ்விடத்தில் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்தல் பொருத்தமாகும். இராமாதுசர் காலத்தில் பட்டர் என்பார் திருவரங்கப் பெருமானுக்கு அந்தரங்கக் கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் திரைமறைவில் சந்நிதியில் ஏதோ பணியில் ஈடுபட்டிருக் கும்போது அவர் உள்ளிருப்பதை அறியாதவர்களாய் திருவரங்கத்தைச் சார்ந்த இரண்டு வைணவர்கள் பட்டரை வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்து கொண்டிருந்தனர். உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த பட்டர் இதனைக்கேட்டுக் கொண்டிருந்தார். வசைமாரி ஓய்ந்த நிலையில் உள்ளிருந்த பட்டர் திரையை விலக்கி வெளிப் போந்து அதிகமாகத் திட்டித் தீர்த்த அன்பருக்கு அரங்களின் உடுத்துக்களைந்த பீதக