பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 174 ஆடையைப் போர்த்தினார். மற்றொருவருக்குத் தாம் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி அவர் கை விரலில் அணிவித்தார். அவர்களை நோக்கி, "தேவரீர் இருவரும் பெரிய பெருமாள் சந்நிதியில் அடியேனின் குற்றங்குறைகளை எடுத்துரைத்தமைக்கு மிகவும் கடப்பாடுடையேன். இவற்றை இயன்றவரை போக்கிக் கொள்ள முயல்வேன்" என்று தெரிவித் தார் இது சிறந்த மானம் - பட்டருடைய மானம். அன்றியும், மானம் உடையவர் தன்னலம் குறைந்த வராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொண்டு பதிலுக்குப் பதில் தீமை செய்தல் கூடாது அதனால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவதும் பொருந்தாது. இன்னும் ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி, தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன் ஆக்கம், தன் கேடு என்பவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று. தன்னைவிட தன் குடி பெரியது. அதைவிட நாடு பெரியது. அதைவிட உலகம் பெரியது அதைவிட உலக வாழ்வதற்கு அடிப் படையான ஒப்புரவு பெரியது. என்று எண்ணுவதே மானமாகும்: அவ்வாறு உயர்வகையான மானமுடையவர்கள் செழித்தோங்கு வதை எந்த நாட்டிலும் காணலாம். ஒப்புரவு, நாடு, குடி என்பவற்றை மறந்து தன்னலம் கொண்டு மனம் பழி, தன் புகழ் என்றும் குறுகிய எல்லையில் மான உணர்வைக் கொண்டவர் கள் நாளுக்கு நாள் தேய்ந்து அழிவதை எந்த நாட்டிலும்