பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் i.78 இன்று எல்லாக் கட்சி அரசியல்வாதிகளிடமும் இப்பண்பைக் காணலாம். இவர்களில் பலர் சாத்தான் வேத்த்தை மேற்கோள் காட்டுவது போல வள்ளுவர் வான்மறையைக் குறிப்பிட்டுப் பேசி உலகை மீண்டும் ஏமாற்றுவார்கள். சீர் பெற வேண்டும் என்பதற்காகவும் தகாதவற்றைச் செய்தல் கூடாது என்பதற்காகவும் உண்மையான சிறப்பையும் மானத்தையும் விரும்புகின்றவர்கள் அவ்வாறு ஒழுகுவார் கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார் அப்பெருமான். சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டுபவர் (962) என்பது அவர்காட்டும் பொய்யாமொழி, மானத்தைப் பற்றி இவர் கூறும் ஒரு கருத்து மறை மொழிபோல் எல்லோரும் கடைப்பிடித்துப் போற்ற வேண்டியது. எல்லோரும் மதிக்கும் நிலை வந்தபோது அந்த மதிப்பு இல்லாததுபோல் நடந்து கொள்ள வேண்டும். அப்போது அம்மதிப்பைப் பொருட்படுத்தி உயர்வோடு நடந்து கொண்டால் அது செருக்காக - அகந்தையாக - தன் முனைப்பாகக் கொள்ளப்படும். ஆனால் மதிப்புக்கு உரிய நிலை இல்லாதபோது தாழ்ந்து நடக்கவும் கூடாது உரிமையும் மதிப்பும் உடையவர்போல் நடந்து கொள்ள வேண்டும். ஆதலால் வாழ்வு பெருகியபோது பணிவு வேண்டும் சுருங்கிய போது உயர்வு வேண்டும். பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு (963) என்பது நடைமுறைக்காக நம் பெருமான் நல்கிய நல்ல மருந்து,