பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

温?9 பண்புடையார் உலகம் உலகம் என்பது என்ன? வெறும் மண்ணா மண்ணில் கலந்துள்ள மற்றப் பூதங்களா?. மரம் செடி கொடியாக உள்ள மண்ணா? மூனையாகவும், நரம்பாகவும். எலும்பாகவும் உள்ள மண்ணா? பண்பு என்ற ஒன்று இல்லையானால் இந்த உலகம் எவ்வாறு தோன்றும்? மண்ணில் வளர் புழுக்களுள் மக்கள் உடல்கள் பெருவகைப் புழுக்களாய்த் தோன்றும். அந்தப் பெருவகைப் புழுக்கள் தம்மைவிட மெலிந்த மக்கட் புழுக் களை வருத்தியும் பொருதும் கொன்றும் வாழ்வதாகத் தோன்றும் இன்னும் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால் மண்ணின் சில பகுதிகள் அசைவும் எழுச்சியும் பெற்று ஒன்று மற்றொன்றைத் தாக்கி மண்ணாய் மாய்வதாகத் தோன்றும் அன்றோ? இங்ஙனம் வெறும் மண்ணாகவோ, நரம்பு மூளை முதலிய உயர்வகை மண்ணாகவோ தோன்றாமல் உண்மைப் பெருமையுடைய உலகமாகத் தோன்றச் செய்வது நெஞ்சப் பண்பு ஒன்றேயாகும். அத்தகைய நெஞ்சப் பண்பு உடையவர் கள் ஒருசிலரேயாயினும் அவர்களால்தான் உலகம் உலகமாய் உள்ளது என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து. அடுத்து மக்கள் என்பவர் யார்? என்பதையும் அறிமுகம் செய்து விளக்குகின்றார் அப்பெருந்தகை, கைகால் முதலிய உறுப்புகளால் மக்களைப்போல் இருப்பவர்கள் மக்கள் அல்லர் அமையத்தக்க பண்பு அமைந் திருந்தால்தான் அவர்கள் மக்கள் எனத் தக்கவர்கள். உறுப்பொத்தல் மக்கள்.ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (993) என்ற தம் ஒப்பற்ற வாக்கால் விளக்குவர். தோற்றத்தால் மட்டும மக்களைப்போல் இருப்பதால் ஒரு சிறப்பும் இல்லை. மேலும் அரத்தின் கூர்மைபோல கூரிய மூளை பெற்றிருந்தாலும்