பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 18ξ என்ற குறளில் அடங்கி இருப்பதைக் காணலாம். குடும்பப் பார்வையைப்போல் நிலப்பார்வையும் அமைய வேண்டும் என்று ஒப்புமைப்படுத்திக் காட்டுவது அற்புதம். உழைப்புக்கேற்பப் பயன் தரவல்லது நிலம், அதனால் நாம் வறுமையுற்று வருந்துகின்றோம் என்று எண்ணித் தொழில் செய்யாமல் இருப்பவரைக் கண்டால் நிலமகள் தன்னுள்ளே நகைப்பாள். இல்லக் கிழத்தியை குலமகள் என்று வழங்குவது போல நிலத்தை நிலமகள் என்று பெண்ணாக உருவகம் செய்து காட்டி விளக்குவது அற்புதம். இக்கருத்து. இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் தல்லாள் நகும் (1040)" என்ற குறளில் அடக்கிக் காட்டியிருப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். உழவுத் தொழில் மனித உழைப்பு இன்றி இயந்தி: உழைப்பினால் நடைபெறும் காலம் வந்து கொண்டிருக்கின்றது உழுவதற்கு இயந்திரம், விதைப்பதற்கு இயந்திரம் அறுவடை செய்வதற்கும் இயந்திரம் என்று எல்லாம் இயந்திரமயமாகும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. தனிப்பட்ட நபர் மூலம் நடைபெறுவது நீங்கி கூட்டுறவு முறை நடைமுறைக்கு வரும் காலம் தலைக் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பில் உழவர்கள் உறிஞ்சப் பெறுதலுக்கு இடம் இல்லாமல் போகும். எதிர்காலத்தில் இந்த முறை ஏற்படுவது திண்ணம். இந்த முறை அமைந்து நடைமுறைக்கு வந்து விட்டால் ஏர்ப்பின்னது உலகம் உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்னும் பொன்மொழிகளின் உண்மை தெளிவாக விளங்கும். 11. மேலது -10